அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராகிரார் முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை

🕔 February 14, 2018

– மப்றூக் –

ட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை நியமிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அரசியலரங்கில் ஏற்பட்டுள்ளன.

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தேசிய காங்கிரசும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியமைப்பதற்கு இணக்கம் கண்டுள்ள நிலையிலேயே, அந்த சபையின் தவிசாளராக உதுமாலெப்பையை நியமிப்பதற்கு இணக்கம் காணப்படுள்ளதாக அறிய முடிகிறது.

தேசிய காங்கிரஸ் சார்பாக எம்.எஸ். உதுமாலெப்பையை தவிசாளராக்குவதற்கு அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தீர்மானித்துள்ளார் எனவும் தெரியவருகிறது.

தேசிய காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளராகவும் உதுமாலெப்பை பதவி வகின்றார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக உதுமாலெப்பை நியமிக்கப்பட்டால், பிரதித் தவிசாளராக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் நியமிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் ஏனைய சபைகளில் இந்த அணிகள் கூட்டாட்சி அமைக்கும் போது, அங்கு அதிக ஆசனங்களைப் பெற்ற தரப்புக்கு தவிசாளர் பதவியை வழங்கவும் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.

இது இவ்வாறிருக்க, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் எம்.எஸ். உதுமாலெப்பை போட்டியிடவில்லை.

எனவே, தேசிய காங்கிரசின் விகிதாசாரப் பட்டியலினூடாகவே உதுமாலெப்பைக்கு ஆசனமொன்றைப் பெற்றுக் கொடுக்க முடியும்.

ஆனால், விகிதாசாரப் பட்டியலினூடாக ஆசனத்தினைப் பெற்றுக் கொள்ளும் ஒருவரை, குறித்த சபையின் தலைவராக நியமிக்க முடியாது என, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முகம்மட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: விகிதாசார பட்டியலிலிருந்து நியமிக்கப்படும் உறுப்பினரை, சபையொன்றின் தலைவராக நியமிக்க முடியாது: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்