Back to homepage

கட்டுரை

ஒளிந்து விளையாடும் காவி அரசியல்

ஒளிந்து விளையாடும் காவி அரசியல் 0

🕔1.Jan 2016

“நயனிலன் என்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரை” மேலே உள்ளது திருக்குறளாகும். அறத்துப் பாலில் வருகிறது. ‘பயனில்லாத பேச்சு, அறிவு கெட்டவன் என்பதைக் காட்டி விடும்’ என்பது, அந்தக் குறளின் பொருளாகும். ‘குர்ஆனைத் தடைசெய்ய வேண்டும்’ என்று சில நாட்களுக்கு முன்னர், பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்திருந்தார். குர்ஆனை தடைசெய்வதன் மூலமே இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை

மேலும்...
சண்டியர்களின் கூடாரம்

சண்டியர்களின் கூடாரம் 0

🕔15.Dec 2015

நாட்டின் அதியுயர் சபையான நாடாளுமன்றமானது, சண்டியர்களின் கூடாரமாக மாறத் துவங்கியுள்ளதோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு சட்டவாக்க சபை, சண்டியர்கள் கூடிக் கலையும் இடமாக மாறுவதென்பது, தேசத்துக்கு மிகப் பெரும் இழுக்காகும். கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை, ஐ.ம.சு.கூட்டணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் வைத்தே தாக்கிய அல்லது தாக்க முயற்சித்த

மேலும்...
றியால்களில் உங்கள் மோட்சத்தை தேடாதீர்கள்

றியால்களில் உங்கள் மோட்சத்தை தேடாதீர்கள் 0

🕔9.Dec 2015

இஸ்லாம் என்பது 14 நூற்றாண்டுகளுக்கு முன் அரேபியாவில் தோன்றிய மதமல்ல. அதன் போதனைகளும் அல்-குர்ஆன் கூறும் வரலாறும் இஸ்லாமானது ஆதம் (அலை) அவர்கள் இவ்வுலகத்துக்கு அனுப்பப்பட்டதிலிருந்து, மனித வர்க்கமானது ஏற்று நடக்கக் கூடிய பூரண வாழ்வொழுங்கை (Life Style) போதிக்கின்ற ஒன்றாகும்.இஸ்லாம் எமக்கு போதிக்கும் சிந்தனைகளும், வாழ்வியல் கோட்பாடுகளும் நடைமுறைக்கு உகந்த அறிவியல் சித்தாந்தங்களாகும். வெறுமனே வரட்டு வாதங்களையும்

மேலும்...
கடைசி மனிதன்

கடைசி மனிதன் 0

🕔9.Dec 2015

எண்பத்து நான்காவது வயதில் அந்தக் கடைசி மனிதன் இறந்து விட்டார். அவர் பிறந்த மண்ணும், மக்களும் அவரை எப்போதும் முதல் மகனாகவே மதிக்கின்றனர். ஒல்லியான தோற்றமும், சாந்தமான முகமும் கொண்ட அந்த மனிதரைக் காட்டி, அவரின் போராட்டம் நிறைந்த வாழ்க்கை பற்றிக் கூறினால், யாரும் அத்தனை எளிதில் நம்பிவிட மாட்டார்கள். அந்தக் கடைசி மனிதனுக்கு மசூர்

மேலும்...
புன்னகைகள் ஆட்கொல்வதில்லை

புன்னகைகள் ஆட்கொல்வதில்லை 0

🕔1.Dec 2015

எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவருடனான உரையாடல் ‘என்னுடைய மனைவிதான் எச்.ஐ.வி.யினால் முதலில் பாதிக்கப்பட்டார். பின்னர்தான், நான் பாதிப்புக்குள்ளானமை பற்றித் தெரிய வந்தது. எனது மனைவி எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்கிற தகவலை வைத்தியர்கள் என்னிடம் கூறியபோது அதிர்ந்து போனேன். என் மனைவி வீட்டுக்குள் இருந்து வாழ்ந்தவர். அவருக்கு அப்படியானதொரு நிலை ஏற்பட்டமையினை என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. எச்.ஐ.வி.

மேலும்...
ஆறாத காயம்

ஆறாத காயம் 0

🕔26.Nov 2015

எழுதி எழுதி அலுத்துப் போன ஒரு விடயத்தை மீளவும் ஒரு முறை எழுத வேண்டிய தேவை எழுந்துள்ளது. எறும்பூர கற்குழியும் என்பார்கள். அப்படியொரு நம்பிக்கையில்தான் இது எழுதப்படுகிறது. சலனமற்ற குளத்தில் எறியப்படும் ஒரு கல்லாக, இந்தக் கட்டுரை இருந்தாலே இப்போதைக்குப் போதுமானதாகும். நுரைச்சோலை வீட்டுத் திட்டம் பற்றி அநேகமானோர் அறிவர். ஒரு காலத்தில் ஊடகங்களில் தீயாகப்

மேலும்...
அஷ்ரப்: வலிதரும் மரணமும், விலகாத மர்மமும்

அஷ்ரப்: வலிதரும் மரணமும், விலகாத மர்மமும் 0

🕔24.Nov 2015

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றினைப் புரட்டிப் போட்டவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப். பத்து வருட நாடாளுமன்ற அரசியலினூடாக ஒரு புரட்சியினைச் செய்து முடித்தார். வியப்புக்கள் நிறைந்த அவரின் வாழ்க்கை போலவே, அவருடைய மரணமும் மர்மங்களாலானது. ஹெலிகொப்டர் விபத்தொன்றில் அஷ்ரப் மரணித்தார். ஆனாலும், அந்த விபத்து, ஒரு சதியாக இருக்குமோ என்கிற

மேலும்...
கரையோர மாவட்டம்: கூச்சலும், குழப்பங்களும்

கரையோர மாவட்டம்: கூச்சலும், குழப்பங்களும் 0

🕔18.Nov 2015

அம்பாறை கரையோர மாவட்டக் கோரிக்கையை மு.காங்கிரஸ் மீளவும் ஒருமுறை வலியுறுத்தி இருக்கிறது. மு.காங்கிரசின் பேராளர் மாநாடு, இரண்டு வாரங்களுக்கு முன்னர் கண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட 15 தீர்மானங்களில், கரையோர மாவட்டக் கோரிக்கையினை வலியுறுத்தும் தீர்மானமொன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் தொகுதிகள் உள்ளடக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களுக்கான கரையோர மாவட்டக் கோரிக்கையை,

மேலும்...
பிரான்ஸ் தாக்குதல்: அவர்களே, அவர்களைக் கொன்றனர்?

பிரான்ஸ் தாக்குதல்: அவர்களே, அவர்களைக் கொன்றனர்? 0

🕔15.Nov 2015

மத்திய கிழக்கில் வரவிருக்கும் புதிய போருக்கு கட்டியம் கூறுகிறது பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதல். பிரான்ஸின் பாரிஸ் நகரில் இனந்தெரியாத ஆயுதபாணிகள், பல இடங்களில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களில், 128 பொது மக்கள் கொல்லப் பட்டனர். 13 – 14 நவம்பர் 2015, நள்ளிரவு நடந்த குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூடு காரணமாக, பாரிஸ் நகரம் போர்க்களமாக

மேலும்...
உள் வட்ட அரசியல்

உள் வட்ட அரசியல் 0

🕔11.Nov 2015

ஆயுத இயக்கங்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை உள்ளக முரண்பாடுகள் இல்லாதவை என்று எவையும் இல்லை. ஆனானப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்கே உள்ளக முரண்பாடுகள்தான் காரணமாகிப் போயின. சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையை முதன் முதலாக ஆட்சி செய்த ஐ.தே.கட்சியில் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகள்தான், அந்தக் கட்சிக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உருவாவதற்குக் காரணமானது. கடந்த

மேலும்...
யானையைச் சுட்டு, பானையில் புதைத்தல்

யானையைச் சுட்டு, பானையில் புதைத்தல் 0

🕔10.Nov 2015

வடபுல முஸ்லிம்கள் அவர்களின் வாழ்விடத்தை விட்டும் புலிகளால் வெளியேற்றப்பட்ட இருபந்தைந்து ஆண்டு நிறைவையொட்டி, முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கிற்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரனும் அழைக்கப்பட்டிருந்தார். இக்கூட்டத்தில் அவர் கருத்து தெரிவிக்கையில், “வடபுல முஸ்லிம்களை புலிகள் சொந்த மண்ணைவிட்டு விரட்டியமை ஜனநாயக விரோத செயல்” என்றும், “எழுபத்தையாயிரம் பேரையும் முற்றாக

மேலும்...
இனச் சுத்திகரிப்பு (Ethnic Cleansing): வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றமும் மீள்குடியேற்றமும்

இனச் சுத்திகரிப்பு (Ethnic Cleansing): வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றமும் மீள்குடியேற்றமும் 0

🕔5.Nov 2015

(கட்டுரையாளர் எம்.எம். பாஸில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல்துறை விரிவுரையாளராவார்) வடமாகாண முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்புக்குட்படுத்தப்பட்டமையை தெளிவுபடுத்தும் முயற்சியாக இச்சிறு கட்டுரை எழுதப்படுகின்றது. இவர்களை மீளக்குடியமர்த்துவதிலுள்ள சவால்கள், பின்பற்றப்பட வேண்டிய உபாயங்கள் என்பன குறித்து இந்த கட்டுரை வலியுறுத்துகின்றது. உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்தோர் கெடுடி யுத்தத்துக்குப் பின்னரான சர்வதேசச் சூழலில் உள்நாட்டு மோதல்கள் மற்றும் உள்நாட்டு யுத்தங்கள் அதிகரித்தன.

மேலும்...
ஹக்கீம் போட்ட முடிச்சுக்களும், அவிழ்த்தல் பற்றிய அனுமானங்களும்

ஹக்கீம் போட்ட முடிச்சுக்களும், அவிழ்த்தல் பற்றிய அனுமானங்களும் 0

🕔4.Nov 2015

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக கடந்த வாரம் திடீரென்று ஏ.எல்.எம். நசீர் பதவிப் பிமாணம் செய்து கொண்டார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மாகாணசபை உறுப்பினர், அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர். கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றினை வழங்குவதாக, மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் வாக்குறுதியொன்றினை

மேலும்...
பலம் அறிதலுக்கான தேர்தல் களம்

பலம் அறிதலுக்கான தேர்தல் களம் 0

🕔28.Oct 2015

ஆட்சி மாற்றங்கள் அநேகமாக உள்ளுர் மட்டங்களிலிருந்துதான் ஆரம்பமாகும். உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் அரசியல் அணிதான், மத்தியிலும் ஆட்சியைப் பிடித்துக் கொள்ளும். ஆனால், இம்முறை நிலைமை தலைகீழ். உள்ளுராட்சி சபைகளில் அநேகமானவை ஐ.ம.சு.கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் இருக்;கும் நிலையில், மத்திய அரசாங்கத்தினை ஐ.தே.கட்சி கைப்பற்றியுள்ளது. இப்போது, உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் அரசியல்

மேலும்...
ஒலுவில்: களவாடப்பட்ட நிலங்கள்

ஒலுவில்: களவாடப்பட்ட நிலங்கள் 0

🕔24.Oct 2015

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதுவும், அதுபோலானதொரு கதைதான். இந்தக் கதையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு தருணத்தில், இது – வெந்த புண்ணில் வேல் பாய்ந்த கதையாக மாறத் துவங்கும். எப்படித்தான் இந்தக் கதை பெயர் மாறினாலும், இதற்குள் இருக்கும் வலி மட்டும் மாறாதது. அஷ்ரப் நகர் பற்றி முதலில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்