Back to homepage

பிரதான செய்திகள்

பொதுத் தேர்தலில் மைத்திரி போட்டியிடுவார்

பொதுத் தேர்தலில் மைத்திரி போட்டியிடுவார்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடுவார் என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த தகவலை வெளியிட்டார். அத்துடன் இம்முறை சகல மாவட்டங்களிலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்

மேலும்...
14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு: பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 15 வருடங்கள் சிறை

14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு: பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 15 வருடங்கள் சிறை

அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 15 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படடுள்ளது. 14 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டதை அடுத்து, இவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெதி இன்று வெள்ளிக்கிழமை இந்தத் தீர்ப்பை வழங்கினார். மேலும் அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன்,

மேலும்...
கட்சிப் பற்றாளர்களை இனங்காண்பதற்கான பொன்னான காலமிது: றிசாட் பதியுதீன்

கட்சிப் பற்றாளர்களை இனங்காண்பதற்கான பொன்னான காலமிது: றிசாட் பதியுதீன்

“கட்சிப்  பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நாம் பார்க்கவேண்டி இருக்கின்றது” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேசபைக்குட்பட்ட கட்சியின் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறினார். நேற்று வியாழக்கிழமை மாலை நடந்த இந்த சந்திப்பின்போது மாந்தை மேற்கு பிரதேசபை

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைக் கூறினார். சந்திரிக்கா வகித்த அமைப்பாளர் வெற்றிடத்துக்கு ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்...
சோரம் போகும் சூழ்ச்சிக்குள், பேரம் பேசும் தனித்துவங்கள்

சோரம் போகும் சூழ்ச்சிக்குள், பேரம் பேசும் தனித்துவங்கள்

– சுஐப் எம்.காசிம் – பொதுத் தேர்தலை வெற்றிகொள்வதற்கான ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த நகர்வுகள் அரசாங்கத்தை அமைக்க உதவுமா? இல்லை தோற்கடிக்கப்பட்டு மேலும், மோதல்களை ஏற்படுத்துமா? ஆதரவாளர்களுக்கு இன்றுள்ள அச்சம்தான் இது. பத்து வருட ஆட்சியைப் புரட்டிப் போட எடுத்த எத்தனங்களுக்கு “ஐந்து வருடங்களாவது ஆட்சியில் இருக்கவில்லையே” என்ற விரக்தியால், இக்கட்சியின் ஆதரவாளர்கள் பலர்

மேலும்...
பொதுத் தேர்தலும் அம்பாறை மாவட்டமும்: மு.கா. தலைவரின் ‘கத்தி’க்குப் பலியாகப் போகும் நாலில் ஒருவர் யார்?

பொதுத் தேர்தலும் அம்பாறை மாவட்டமும்: மு.கா. தலைவரின் ‘கத்தி’க்குப் பலியாகப் போகும் நாலில் ஒருவர் யார்?

– மப்றூக் – நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. முதலில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணியாகவா? அல்லது தனித்தா? போட்டியிடும் என்கிற கேள்விகள் உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் பொதுத்

மேலும்...
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா: அதிபர் அன்சார் தலைமை

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா: அதிபர் அன்சார் தலைமை

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் முதலாம் வகுப்புக்கு சேர்ந்து கொண்ட புதிய மாணவர்களை வாழ்த்தி வரவேற்கும் வித்தியாரம்ப விழா, அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் ஆரம்பக் கல்விக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. அபுதாஹிர், பாடசாலைக்கான மேம்பாட்டுத் திட்ட இணைப்பாளர் எம்.ஐ. அன்சார், மக்கள் வங்கியின் சந்தைப்

மேலும்...
கட்சித் தலைவர் பதவி தொடர்பில் தீர்மானம் எட்டப்படாமல், ஐ.தே.க. நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கலைந்தது

கட்சித் தலைவர் பதவி தொடர்பில் தீர்மானம் எட்டப்படாமல், ஐ.தே.க. நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கலைந்தது

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியைத் தீர்மானிப்பதற்காக, கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொழுதிலும், எவ்வித முடிவும் எட்டப்படவில்லை என்று கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இந்நிலையிலேயே தலைவர் பதவி தொடர்பில் எவ்வித

மேலும்...
எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க 01 கோடி 62 லட்சம் பேர் தகுதி

எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க 01 கோடி 62 லட்சம் பேர் தகுதி

எதிர்வரும் தேர்தலில் வாக்களிப்பதற்கு சுமார் ஒரு கோடி 62 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனரென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் டாப்பு தயாரிப்புப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் வாக்களிக்கத்

மேலும்...
ஜனாதிபதி: அதிரடிகள் மட்டும் போதாது

ஜனாதிபதி: அதிரடிகள் மட்டும் போதாது

– முகம்மது தம்பி மரைக்கார் – புதிய ஜனாதிபதியின் நடவடிக்கைகளில் அநேகமானவை அதிரடியாக உள்ளன. “கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால், நாடு குட்டிச் சுவராகி விடும்“ என்று தேர்தல் காலத்தில் தொண்டை கிழிய பிரசாரம் செய்தவர்கள் கூட, இப்போது ஜனாதிபதி எடுக்கும் முடிவுகள் பற்றியும் நடவடிக்கை குறித்தும் புல்லரித்துப் பேசியும் எழுதியும் வருகின்றார்கள். மஹிந்த ராஜபக்ஷ

மேலும்...