
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற 08 வீதி விபத்துக்களில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டிஐஜி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
புஸ்ஸல்லாவ மற்றும் ஹாலி-எல ஆகிய இடங்களில் இடம்பெற்ற இரண்டு விபத்துக்களில் 04 பேர் உயிரிழந்தனர். மஹியங்கனை, கிரிந்திவெல, அம்பலாந்தோட்டை, பூகொட, மாத்தறை மற்றும் தனமல்வில ஆகிய இடங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 06 பேர் உயிரிழந்தனர்.
08 வீதி விபத்துக்களில் ஐந்து விபத்துக்களுக்கு வாகனங்கள் வீதியை விட்டு விலகிச் சென்றமையே காரணம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டிஐஜி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.



