மியன்மாரில் 07 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு

🕔 April 17, 2024

மியன்மாரில் 07 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 இலங்கை மீனவர்களுக்கு அந்த நாட்டு அரசு – பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (17) அறிவித்துள்ளார்.

கடந்த டிசம்பரில் மியான்மர் அதிகாரிகளால் 15 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி ‘எக்ஸ்’ தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மியான்மார் கடல் எல்லையை மீறி – மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக, இரண்டு மீன்பிடி படகுகளுடன் மொத்தம் 15 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கல்பிட்டி மற்றும் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த நொவம்பரில் ‘ராயன்புதா’ மற்றும் ‘லோரன்ஸ்’ ஆகிய இரு படகுகளில் புறப்பட்டனர்.

இந்த நிலையில் டிசம்பர் 02ஆம் திகதி மியான்மார் அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் சார்பில் மியான்மார் அரசிடம் கருணை கோரி இந்த ஆண்டு ஏப்ரலில் – இலங்கை முறைப்படி மனு செய்ததாக தகவல் வெளியானது.

ஏப்ரல் 17ஆம் திகதி மியான்மாரின் பொது மன்னிப்பு தினத்தை முன்னிட்டு, இந்த முறையீடு செய்யப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்தார்.

இலங்கை மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு மியான்மார் பிரதமரிடம் நேரடியாக வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் ஜனக பண்டார தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்