ஹஜ் யாத்திரீகர்களுக்கான 2024ஆம் ஆண்டுக்குரிய ஒதுக்கீட்டை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு

🕔 April 16, 2024

ஜ் யாத்ரீகர்களுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான முந்தைய ஒதுக்கீட்டை இடைநிறுத்தவும், முறையான ஒதுக்கீட்டுக்காக – பாதிக்கப்பட்ட பயண முகவரைச் சேர்க்கவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரேபிய அரசாங்கம் ஹஜ் யாத்ரீகர்களின் வருகையை நிர்வகிப்பதற்கு, ஒவ்வொரு நாட்டிற்கும் ஒதுக்கீட்டை வழங்குகிறது.

இந்த ஆண்டு இலங்கைக்கு 3,500 யாத்ரீகர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். இது வெவ்வேறு பயண முகவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் பயண முகவர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை அடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமது பயண உரிமத்தை இரண்டு ஆண்டுகளுக்கு ஹஜ் கொமிட்டி தன்னிச்சையாக ரத்து செய்ததாக பயண முகவர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பிணை காரணங்களுக்காவே தமது உரிமம் – இரண்டு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட்டதாக – யுனைடெட் ட்ரவல்ஸ் எனும் மனுதாரரின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான பயண முகவராக தன்னைப் பதிவு செய்யுமாறும், டிசம்பர் 2023இல் செய்யப்பட்ட ஹஜ் ஒதுக்கீட்டை இடைநிறுத்துமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.

இதனையடுத்து நீதியரசர் டி.என். சமரகோன் தனது உத்தரவில், யுனைடெட் ட்வல்ஸை பயண முகவராகப் பதிவு செய்யவும், மனுதாரர் நிறுவனத்தை சேர்க்காத ஹஜ் குழுவின் முந்தைய ஒதுக்கீட்டை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்