Back to homepage

Tag "மரணம்"

கொரோனா தொற்றினால் 11ஆவது மரணம்; நாட்டில் பதிவாகியுள்ளது

கொரோனா தொற்றினால் 11ஆவது மரணம்; நாட்டில் பதிவாகியுள்ளது 0

🕔1.Jun 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளார். இதனையடுத்து கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 45 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். இவர் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக் காரணமாக 1633 பேர் இதுவரை (திங்கட்கிழமை காலை

மேலும்...
அதிக கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் இன்று அடையாளம் காணப்பட்டனர்

அதிக கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் இன்று அடையாளம் காணப்பட்டனர் 0

🕔26.May 2020

நாட்டில் இன்றைய தினம் (மாலை 06 மணிவரை) 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். ஒரே தினத்தில் அதிகளவான கோரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டமை இதுவே முதன்முறையாகும். இதனால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,278 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை 712 பேர் கொரோனா தொற்றிலிருந்து சுகமடைந்துள்ளனர். உலகளவில் 55 லட்சத்து

மேலும்...
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார் 0

🕔26.May 2020

அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.  29ஆம் திகதி மே மாதம் 1964ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு 55 வயதாகிறது. கொழும்பிலுள்ள அவரின் வீட்டில் இருந்த போது திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால், தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே, அவர் மரணமடைந்தார். இவர் முதற் தடவையாக 1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா

மேலும்...
கொரோ தொற்று காரணமாக பெண்ணொருவர் உயிரிழப்பு

கொரோ தொற்று காரணமாக பெண்ணொருவர் உயிரிழப்பு 0

🕔25.May 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குவைத்தில் இருந்த அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குவைத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட சிலர் – திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கிணங்க, நாட்டில் கொரோனாவினால்

மேலும்...
கொரோனாவுக்கு பலியாகதவரின் பெயரை, கொரோனா ‘மரணக் கணக்கில்’ ஏன் இன்னும் பதிந்து வைத்திருக்கிறார்கள்: எழுகிறது விசனம்

கொரோனாவுக்கு பலியாகதவரின் பெயரை, கொரோனா ‘மரணக் கணக்கில்’ ஏன் இன்னும் பதிந்து வைத்திருக்கிறார்கள்: எழுகிறது விசனம் 0

🕔10.May 2020

– அஹமட் – கொரோனா தொற்று காரணமாக இறுதியாக (09ஆவதாக) இறந்ததாகக் கூறப்பட்ட பெண்ணுக்கு, உண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என, ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்களில் – கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 09 என குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் விசனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இது குறித்து சமூக ஆர்வலர்

மேலும்...
கட்டி முடிக்கப்படாத கிணற்றில் வீழ்ந்த சிறுவர்கள் இருவர் சம்மாந்துறையில் பலி; பட்டம் விடுவதைப் பார்க்கச் சென்றபோது நிகழ்ந்த துயரம்

கட்டி முடிக்கப்படாத கிணற்றில் வீழ்ந்த சிறுவர்கள் இருவர் சம்மாந்துறையில் பலி; பட்டம் விடுவதைப் பார்க்கச் சென்றபோது நிகழ்ந்த துயரம் 0

🕔10.May 2020

– பாறுக் ஷிஹான் – கட்டி முடிக்கப்படாத கிணறொன்றில் தவறி  வீழ்ந்து, இரண்டு ஆண் சிறுவர்கள் மரணமடைந்த சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. வீட்டுக்கு அருகில் பட்டம் விருவதை இவ்விருவரும் பார்க்கச் சென்ற போது, இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ‘புளோக் ஜே’ கிழக்கு -3 பகுதியில் நேற்று சனிக்கிழமை

மேலும்...
கொரோனா பாதிப்பு உயர்கிறது: நோயாளர்கள் 775, பலி எண்ணிக்கை 09

கொரோனா பாதிப்பு உயர்கிறது: நோயாளர்கள் 775, பலி எண்ணிக்கை 09 0

🕔5.May 2020

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 755 ஆக (இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் 2.00 மணி வரை) அதிகரித்துள்ளது. அதேவேளை, மரண எண்ணிக்கையும் 09ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் கொழும்பு – முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 52 வயது பெண் ஒருவர் கொரோனாவினால் இறந்தார். அங்கொடை தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர்

மேலும்...
கொரோனாவினால், இன்று மாலை வரை மட்டும், நாட்டில் 15 பேர் பாதிப்பு

கொரோனாவினால், இன்று மாலை வரை மட்டும், நாட்டில் 15 பேர் பாதிப்பு 0

🕔19.Apr 2020

கொரோனாவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (மாலை 6.00 மணி வரையில்) மட்டும், 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் இதுவரை 269 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இருந்தபோதும், இவர்களில் 96 பேர் சுகமடைந்து தமது இடங்களுக்குத் திரும்பியுள்ளனர். இலங்கையில் இதுவரையில் 07 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இருந்தபோதும் உலகளவில் 23

மேலும்...
கொரோனா: எந்த நாட்டிலும் இல்லாதளவு, அமெரிக்காவில் நேற்றைய தினம், ஒரே நாளில் அதிகமானோர் பலி

கொரோனா: எந்த நாட்டிலும் இல்லாதளவு, அமெரிக்காவில் நேற்றைய தினம், ஒரே நாளில் அதிகமானோர் பலி 0

🕔16.Apr 2020

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று புதன்கிழமை மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 2600 ஆக பதிவாகியுள்ளது. இது அமெரிக்காவில் மட்டுமல்லாமல், எந்த ஒரு நாட்டிலும் இது வரை ஒரே நாளில் ஏற்பட்ட மிகவும் அதிக பட்ச உயிரிழப்பாகும். அந்நாட்டில் மட்டும் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதில் முக்கியமாக நிவ்யோக் நகரில் மட்டும் அதிகபட்சமாக

மேலும்...
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔12.Apr 2020

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் (பிற்பகல் 1.00 மணி வரை) புதிதாக 04 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, பாதிக்கப்பட்டோரில் 55 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் 17 லட்சத்து 81,436 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 01 லட்சத்து 8,883 பேர் மரணமடைந்துள்ளனர். 04 லட்சத்து 4,616

மேலும்...
கொரோனா: பாதிக்கப்பட்டோர் தொகை, உலகளவில் 01 லட்சத்தை எட்டுகிறது

கொரோனா: பாதிக்கப்பட்டோர் தொகை, உலகளவில் 01 லட்சத்தை எட்டுகிறது 0

🕔10.Apr 2020

கொரோனா நோயாளர்கள் எவரும் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் அடையாளம் காணப்படவில்லை என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றியோர் 190 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்தப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இவர்களில் 54 பேர் குணமடைந்து, தமது இருப்பிடங்களுக்குச் சென்றுள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின்

மேலும்...
கொரோனா மரணம்: நாட்டில் 07ஆக அதிகரிப்பு

கொரோனா மரணம்: நாட்டில் 07ஆக அதிகரிப்பு 0

🕔8.Apr 2020

கொரோனா தாக்கத்தினால் நபரொருவர் இன்று புதன்கிழமை மரணமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனாவினால் மரணமடைந்த 07ஆவது நபர் இவராவார். இவர் அங்கொடயிலுள்ள தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதுடைய ஆண் ஆவார். இந்த நிலையில், நாட்டில் மொத்தமாக கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 188 ஆக (இன்று

மேலும்...
தெஹிவளையைச் சேர்ந்த ஆண் ஒருவர், கொரோனா தொற்று காரணமாக மரணம்

தெஹிவளையைச் சேர்ந்த ஆண் ஒருவர், கொரோனா தொற்று காரணமாக மரணம் 0

🕔7.Apr 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் இன்னுமொருவர் மரணமடைந்துள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட 06வது மரணம் இதுவாகும். இவ்வாறு மரணித்தவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் இதுவரை 180 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக (செவ்வாய்கிழமை காலை

மேலும்...
கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஐந்தாமவர், இத்தாலியிருந்து நாடு திரும்பியவர்

கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஐந்தாமவர், இத்தாலியிருந்து நாடு திரும்பியவர் 0

🕔4.Apr 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05ஆக உயர்வடைந்துள்ளது. வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்ததாக, சுகதார சேவை பணிப்பாளர் நாயகம் இன்று சனிக்கிழமை காலை அறிவித்திருந்தார். இது – கொரோனா தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்ட 05ஆவது மரணமாகும். இவ்வாறு மரணித்த நபர் இத்தாலியிலிருந்து நாடு

மேலும்...
இஸ்லாத்தின் அடிப்படையில் ‘கெட்ட மரணம்’ என்றால் என்ன?

இஸ்லாத்தின் அடிப்படையில் ‘கெட்ட மரணம்’ என்றால் என்ன? 0

🕔2.Apr 2020

– ஜவ்ஸி அப்துல் ஜப்பார் – இந்த நாட்களில் சமூக வலைத் தளங்களில் பலரும் ‘கெட்ட மரணம்’ என்பது, மரணித்த பின்னர் ஒருவரின் சடலத்துக்கு நடக்கும் இறுதிக் கிரியையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் ஒரு விடயம் என்பது போல் பதிவிடுகின்றனர். அதற்கும் மேலாக அப்படியான மரணம் தனக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்று பிரார்த்தனை செய்ய மற்றவர்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்