கொரோனா: பாதிக்கப்பட்டோர் தொகை, உலகளவில் 01 லட்சத்தை எட்டுகிறது

🕔 April 10, 2020

கொரோனா நோயாளர்கள் எவரும் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் அடையாளம் காணப்படவில்லை என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றியோர் 190 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்தப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இவர்களில் 54 பேர் குணமடைந்து, தமது இருப்பிடங்களுக்குச் சென்றுள்ளனர்.

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில், 224 பேர், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, உலகளவில் 16 லட்சத்து 05,712 பேர் இன்று வியாழக்கிழமை (மாலை 6.00 மணி) வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 95,766 பேர் மரணமடைந்துள்ளனர்.

எவ்வாறாயினும் உலகளவில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் 03 லட்சத்து 56,986 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments