கொரோனா தொற்றினால் 11ஆவது மரணம்; நாட்டில் பதிவாகியுள்ளது

🕔 June 1, 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 45 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இவர் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக் காரணமாக 1633 பேர் இதுவரை (திங்கட்கிழமை காலை 07 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில்) பாதிக்கப்பட்டுள்ளனர் என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 801 நபர்கள் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments