அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

🕔 May 26, 2020

மைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.

 29ஆம் திகதி மே மாதம் 1964ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு 55 வயதாகிறது.

கொழும்பிலுள்ள அவரின் வீட்டில் இருந்த போது திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால், தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே, அவர் மரணமடைந்தார்.

இவர் முதற் தடவையாக 1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.

இவர் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments