Back to homepage

Tag "ஜோன்ஸ்டன் பெனாண்டோ"

ஜோன்ஸ்டன், பிரசன்ன, டிலும் உள்ளிட்டோரின் சு.கா. அங்கத்துவம் பறிபோகும் அபாயம்

ஜோன்ஸ்டன், பிரசன்ன, டிலும் உள்ளிட்டோரின் சு.கா. அங்கத்துவம் பறிபோகும் அபாயம் 0

🕔4.Sep 2016

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, பிரசன்ன ரணதுங்கள உள்ளிட்டவர்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் வகிக்கும் அங்கத்துவம் பறிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டினைப் பகிஸ்கரிப்பதென, ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்ட தீர்மானத்தினை அடுத்து, எதிரணியிலுள்ள சுதந்திரக் கட்சி அங்கத்தவர்கள் பலரின் உறுப்புரிமையை பறிப்பது என, அந்தக் கட்சி தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன்

மேலும்...
மலேசியா பறந்தார் மஹிந்த; சு.கா. மாநாட்டுக்கு டிமிக்கி

மலேசியா பறந்தார் மஹிந்த; சு.கா. மாநாட்டுக்கு டிமிக்கி 0

🕔1.Sep 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று வியாழக்கிழமை அதிகாலை மலேசியாவுக்கு பயணமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 318 என்ற விமானத்தினூடாக, அவர் மலேசியா சென்றுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ உள்ளிட்ட  சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் பயணமாகியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அழைப்பு மஹிந்தவிற்கு விடுக்கப்பட்டிருந்த

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை 0

🕔1.Sep 2016

நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெனாண்டோவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் நடவடிக்கைகளை ஜோன்ஸ்டன் பகிரங்கமாக விமர்சனம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், மத்திய செயற்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்

மேலும்...
றிசாத் மீது மோசடி குற்றச்சாட்டு; ஆஜராகுமாறு அழைப்பு

றிசாத் மீது மோசடி குற்றச்சாட்டு; ஆஜராகுமாறு அழைப்பு 0

🕔19.Aug 2016

பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகளுகளை விசாரிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு, அமைச்சர் றிசாட் பதியுத்தீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ‘சதோச’ நிறுவனத்துக்காக இறக்குமதி செய்யப்பட்ட 05 பில்லியன் ரூபா பெறுமதியான அரிசி இறக்குமதியில், கடந்த ஆட்சிக் காலத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ரிசாத் பதியுதீன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு  தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவு, றிசாத் பதியுத்தீனுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த

மேலும்...
ஜோன்ஸ்டன் பறக்கலாம்; நீதிமன்றம் அனுமதி

ஜோன்ஸ்டன் பறக்கலாம்; நீதிமன்றம் அனுமதி 0

🕔11.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, வெளிறாடு செல்வதற்கு விதித்திருந்த தடையினை கொழும்பு மேலதிக நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய, இன்று வியாழக்கிழமை நீக்கி உத்தரவிட்டார். ஜோன்ஸ்டன் பெனாண்டோ, கடந்த ஐந்தாண்டுகளில் சம்பாதித்த சொத்துக்கள் மற்றும் பெற்ற கடன்கள் தொடர்பான தகவல்களை, நீதிமன்றில் வெளியிடத் தவறியமை காரணமாக, அவர் வெளிநாடு செல்வதற்கான தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தனது மனைவிக்கு சிங்கப்பூரில் சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால், தன்னை

மேலும்...
மஹிந்தவின் யுத்த வெற்றிக் கொண்டாட்டம் ரத்து: ஜோன்ஸ்டன் அறிவிப்பு

மஹிந்தவின் யுத்த வெற்றிக் கொண்டாட்டம் ரத்து: ஜோன்ஸ்டன் அறிவிப்பு 0

🕔18.May 2016

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவிருந்த யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுடான யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்கள் நிறைவு பெறுவதை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை வியாழக்கிழமை யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. குருநாகல் நகரில் அமைந்துள்ள பௌத்தாலோக பிரிவெனவில் நடைபெறவிருந்த குறித்த

மேலும்...
ஒரு வாரம் வெளிநாடு செல்ல, ஜோன்ஸ்டனுக்கு நீதிமன்றம் அனுமதி

ஒரு வாரம் வெளிநாடு செல்ல, ஜோன்ஸ்டனுக்கு நீதிமன்றம் அனுமதி 0

🕔16.May 2016

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, வெளிநாடு செல்வதற்கு கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய இன்று திங்கட்கிழமை அனுமதி வழங்கினார். இதற்கிணங்க, நீதிமன்றத்தில் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் கடவுச் சீட்டு விடுவிக்கப்பட்டது. ஜோன்ஸ்டன் பெனாண்டோ தனது மனைவியை சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்லவுள்ளதாகவும், இதற்காக தனக்கு அனுமதி வழங்குமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்