மலேசியா பறந்தார் மஹிந்த; சு.கா. மாநாட்டுக்கு டிமிக்கி

🕔 September 1, 2016

Mahinda - 0134முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று வியாழக்கிழமை அதிகாலை மலேசியாவுக்கு பயணமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 318 என்ற விமானத்தினூடாக, அவர் மலேசியா சென்றுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ உள்ளிட்ட  சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் பயணமாகியுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அழைப்பு மஹிந்தவிற்கு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் அவர் மலேசியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்