ஜோன்ஸ்டன், பிரசன்ன, டிலும் உள்ளிட்டோரின் சு.கா. அங்கத்துவம் பறிபோகும் அபாயம்

🕔 September 4, 2016

Prasanna+johnson+Dilum - 098நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, பிரசன்ன ரணதுங்கள உள்ளிட்டவர்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் வகிக்கும் அங்கத்துவம் பறிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.

சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டினைப் பகிஸ்கரிப்பதென, ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்ட தீர்மானத்தினை அடுத்து, எதிரணியிலுள்ள சுதந்திரக் கட்சி அங்கத்தவர்கள் பலரின் உறுப்புரிமையை பறிப்பது என, அந்தக் கட்சி தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெனாண்டோ, பிரசன்ன ரணதுங்க மற்றும் டிலும் அமுனுகம ஆகியோரின், கட்சி அங்கத்துவம் பறிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்