நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

🕔 September 1, 2016

Jhonston - 012நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெனாண்டோவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் நடவடிக்கைகளை ஜோன்ஸ்டன் பகிரங்கமாக விமர்சனம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், மத்திய செயற்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த விழாவில் பங்கேற்பது குறித்து ஜோன்ஸ்டன் பெனாண்டோ, அண்மையில் குருணாகலில் பகிரங்கமாக வெளியிட்ட கருத்துக் குறித்தும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, மத்திய செயற்குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ஜயரட்ன ஹேரத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சியின் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் வாத விவாதங்களில் ஈடுபடாது, கட்சியின் வருடாந்த நிகழ்வுகளை வெற்றிகரமாக மேற்கொள்ள முயற்சிக்குமாறு, சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்