மஹிந்தவின் யுத்த வெற்றிக் கொண்டாட்டம் ரத்து: ஜோன்ஸ்டன் அறிவிப்பு

🕔 May 18, 2016

Mahinda - 053ஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவிருந்த யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுடான யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்கள் நிறைவு பெறுவதை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை வியாழக்கிழமை யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

குருநாகல் நகரில் அமைந்துள்ள பௌத்தாலோக பிரிவெனவில் நடைபெறவிருந்த குறித்த வெற்றிக் கொண்டாட்டங்கள் ரத்துச் செய்யயப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக, ஏராளம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்திற் கொண்டு, குறித்த யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்