Back to homepage

Tag "கொரோனா"

எஸ்.பி. திஸாநாயகவின் தலையை சோதனை செய்ய வேண்டும்: மனோ கணேசன்

எஸ்.பி. திஸாநாயகவின் தலையை சோதனை செய்ய வேண்டும்: மனோ கணேசன் 0

🕔19.Apr 2020

“கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்பில், நான் தெரிவித்த கருத்தை சரியாக புரிந்துக்கொள்ள முடியாத அமைச்சர் திசாநாயக்க, நான் சொல்லாததை சொன்னதாக கூறுகிறார். பொய் சொல்கிறார். கொரோனா நோயாளர்கள் பரிசோதிக்கப்படுவதை போன்று, அமைச்சர் திஸாநாயக்கவின் தலையையும் சோதனை செய்ய வேண்டும்” என்று, முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின்

மேலும்...
கொழும்பு மத்திய தபாலகத்தின் பணிகள், ஒரு மாதத்தின் பின்னர் ஆரம்பம்

கொழும்பு மத்திய தபாலகத்தின் பணிகள், ஒரு மாதத்தின் பின்னர் ஆரம்பம் 0

🕔18.Apr 2020

கொழும்பு மத்திய தபாலகத்தில் தேங்கிக் கிடந்த தபால்களை பரிமாற்றும் உள்ளக நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் பிராந்திய தபால் பரிமாற்றல் பகுதியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மூன்று லட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் தபால் திணைக்களத்தில் குவிந்து கிடப்பதாகவும், குறைந்தபட்ச ஊழியர்களை பயன்படுத்தி, கடிதங்களை வகை

மேலும்...
பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்க வேண்டாம்: தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை

பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்க வேண்டாம்: தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை 0

🕔17.Apr 2020

இலங்கையில் கொவிட்–19 தொற்று முற்றாக நீங்கும் வரை பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்க வேண்டாமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டில் சுமூகமான நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் தேர்தல் அறிவிப்பு விடுக்கப்படுமானால், அது சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடைபெறுவதை பெரிதும் பாதிக்கும் என்றும் அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம்

மேலும்...
பல்கலைக்கழகங்களை மீளத் திறக்கும் தீர்மானத்தை பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை

பல்கலைக்கழகங்களை மீளத் திறக்கும் தீர்மானத்தை பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை 0

🕔17.Apr 2020

பல்கலைக்கழகங்களை மீளத்திறக்கும் தீர்மானத்தை பரிசீலனை செய்யுமாறு பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இன்னும் தொற்றாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிபுணர்களும் தொற்று அதிகரிக்காது என்பதற்கான காரணத்தை இன்னும் நிராகரிக்கவில்லை. எனவே மே மாதம் 04ஆம் திகதி அரச

மேலும்...
ஊரடங்கை தளர்த்த வேண்டாம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

ஊரடங்கை தளர்த்த வேண்டாம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை 0

🕔17.Apr 2020

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்கக்கூடாது என இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் டொக்டர் சமந்த ஆனந்த தெரிவிக்கையில்; “கொரோனா வைரஸ் நோய், மற்றைய நாடுகளைப் போன்று, இலங்கையில் பரவவில்லை என்பது உண்மை. மற்றைய நாடுகளில் ஆயிரக்கணக்கானோர்

மேலும்...
கொரோனா: எந்த நாட்டிலும் இல்லாதளவு, அமெரிக்காவில் நேற்றைய தினம், ஒரே நாளில் அதிகமானோர் பலி

கொரோனா: எந்த நாட்டிலும் இல்லாதளவு, அமெரிக்காவில் நேற்றைய தினம், ஒரே நாளில் அதிகமானோர் பலி 0

🕔16.Apr 2020

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று புதன்கிழமை மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 2600 ஆக பதிவாகியுள்ளது. இது அமெரிக்காவில் மட்டுமல்லாமல், எந்த ஒரு நாட்டிலும் இது வரை ஒரே நாளில் ஏற்பட்ட மிகவும் அதிக பட்ச உயிரிழப்பாகும். அந்நாட்டில் மட்டும் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதில் முக்கியமாக நிவ்யோக் நகரில் மட்டும் அதிகபட்சமாக

மேலும்...
5000 ரூபா கொடுப்பனவு திட்டத்திலிருந்து விலகத் தீர்மானம்

5000 ரூபா கொடுப்பனவு திட்டத்திலிருந்து விலகத் தீர்மானம் 0

🕔16.Apr 2020

கொரோனா பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, அரசாங்கம் நிவாரணமாக வழங்கி வரும் 5000 ரூபாய் கொடுப்பனவு திட்டத்திலிருந்து விலகிக்கொள்ள கிராம உத்தியோகத்தர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த கொடுப்பனவு தொடர்பில் கிராம உத்தியோகத்தர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றுநிரூபங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசப்படுவதாக சுட்டிக்காட்டியே அந்த சங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இதேவேளை, இந்தக் கொடுப்பனவு குறித்து பல்வேறு

மேலும்...
அவசர தேர்தல்,  அனைவரின் அர்ப்பணிப்புக்களையும் வீண் விரயமாக்கி விடும்: மங்கள

அவசர தேர்தல், அனைவரின் அர்ப்பணிப்புக்களையும் வீண் விரயமாக்கி விடும்: மங்கள 0

🕔15.Apr 2020

அவசரமான தேர்தலை நடத்துவது கடந்த ஒரு மாத காலமாக இலங்கையின் அனைத்து தரப்பினரும் கொரோனா வைரசுக்கு எதிராக நடத்திய போராட்டத்தை வீண் விரயமாக்கும் நடவடிக்கை என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை 100 வீதம் கட்டுப்படுத்தும் வரை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
கொரோனா தொற்று தொடர்பில், வதந்தி பரப்பிய 07 பேர் கைது

கொரோனா தொற்று தொடர்பில், வதந்தி பரப்பிய 07 பேர் கைது 0

🕔13.Apr 2020

கொரோன தொற்று தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டு 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் குற்ற புலனாய்வு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோன வைரஸ் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இதில்

மேலும்...
மருத்துவ பணியாளர்கள் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிப்பு

மருத்துவ பணியாளர்கள் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிப்பு 0

🕔12.Apr 2020

கொரோனா தொற்றினால் 52 நாடுகளில் 22,073 மருத்துவ பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஏப்ரல் 8ஆம் திகதி வரையிலான கணக்கெடுப்பாகும். இந்தத் தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்; அனைத்து நாடுகளில் இருந்தும் முழுமையான தரவுகள் கிடைக்கப் பெறவில்லை என்பதால், இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. கொரோனா

மேலும்...
வீதிகளில் பயணிப்போர் முகக் கவசம் அணிய வேண்டும்: கட்டாயமாக்கியது பொலிஸ்

வீதிகளில் பயணிப்போர் முகக் கவசம் அணிய வேண்டும்: கட்டாயமாக்கியது பொலிஸ் 0

🕔11.Apr 2020

வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது இன்று தொடக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் வீதிகளில் பயணிப்பவர்களை, திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன பொலிஸ் நிலையங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். எவ்வாறாயினும் கொரோனா தொற்று பரவியமையை அடுத்து, நாட்டில் முகக் கவசங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தரம்

மேலும்...
கொரோனா தொற்றுக்குள்ளான 07 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்; அறுவர், போதைவஷ்து பாவனையாளர்கள்

கொரோனா தொற்றுக்குள்ளான 07 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்; அறுவர், போதைவஷ்து பாவனையாளர்கள் 0

🕔11.Apr 2020

நாட்டில் மேலும் 07 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 6 பேர் ஜா – எல, சுதுவெல்ல பகுதியைச் சேர்ந்தவர்களாவர். இந்த 06 பேரும் ஒலுவிலில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஜா – எல பகுதியில் புதிதாக அடையாளம் காணப்பட்ட மேற்படி 06 பேரும், போதைவஸ்து பாவனையாளர்கள் என, சிரேஷ்ட

மேலும்...
எனக்கு கொரோனா பாதிப்பு எனும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை: காதர் மஸ்தான் தெரிவிப்பு

எனக்கு கொரோனா பாதிப்பு எனும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை: காதர் மஸ்தான் தெரிவிப்பு 0

🕔10.Apr 2020

கொரோனா தொற்றினால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அதிகாரிகள் தன்னைத் தனிமைப்படுத்தி உள்ளதாகவும், சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். அதேவேளை, சுய விருப்பின் பெயரில் தனிமைப்படுத்தலுக்கு தன்னை உட்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவற்றினை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அந்த

மேலும்...
கொரோனா நெருக்கடிக்கு, 19ஆம் திகதிக்குள் முடிவு: சுகாதார அமைச்சர் பவித்ரா

கொரோனா நெருக்கடிக்கு, 19ஆம் திகதிக்குள் முடிவு: சுகாதார அமைச்சர் பவித்ரா 0

🕔10.Apr 2020

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை, நாட்டில் எதிர்வரும் 19 ஆம் திகதிக்குள் முடிவுக்குக் கொண்டு வரலாம் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்று தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறினார். “ஏப்ரல் 19 ஆம் திகதிக்குள் அனைத்து கொரோனா வைரஸ்

மேலும்...
கொரோனா: பாதிக்கப்பட்டோர் தொகை, உலகளவில் 01 லட்சத்தை எட்டுகிறது

கொரோனா: பாதிக்கப்பட்டோர் தொகை, உலகளவில் 01 லட்சத்தை எட்டுகிறது 0

🕔10.Apr 2020

கொரோனா நோயாளர்கள் எவரும் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் அடையாளம் காணப்படவில்லை என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றியோர் 190 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்தப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இவர்களில் 54 பேர் குணமடைந்து, தமது இருப்பிடங்களுக்குச் சென்றுள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்