பல்கலைக்கழகங்களை மீளத் திறக்கும் தீர்மானத்தை பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை

🕔 April 17, 2020

ல்கலைக்கழகங்களை மீளத்திறக்கும் தீர்மானத்தை பரிசீலனை செய்யுமாறு பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இன்னும் தொற்றாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நிபுணர்களும் தொற்று அதிகரிக்காது என்பதற்கான காரணத்தை இன்னும் நிராகரிக்கவில்லை.

எனவே மே மாதம் 04ஆம் திகதி அரச பல்கலைக்கழகங்களை திறப்பது என்ற அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் உலகில் உள்ள அனைத்து நிபுணர்களும் துல்லியமாக கணிக்கத் தவறியுள்ளனர்.

இந்த நிலையில் நடைமுறை சூழ்நிலையில் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கான முடிவின் பின்னணியை விளக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஆசிரியர் சம்மேளனம் கோரியுள்ளது.

Comments