கொரோனா தொற்று தொடர்பில், வதந்தி பரப்பிய 07 பேர் கைது

🕔 April 13, 2020

கொரோன தொற்று தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டு 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களில் குற்ற புலனாய்வு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கொரோன வைரஸ் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

இதில் இரண்டு பேர் ஏப்ரல் 10ஆம் திகதி பெலிகல மற்றும் கட்டுகஸ்தோட்டை ஆகிய இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

ஏப்ரல் 11 ஆம் திகதியன்று 04 பேர் கைது செய்யப்பட்டனர். வெலிமடை கடவத்தை, ராகம ஆகிய இடங்களில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் இருவர் ஏப்ரல் 16ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று 12ஆம் திகதி நொச்சியாகம பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் அனைவருமே சமூக ஊடகங்களின் ஊடாக, கொரோன வைரஸ் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Comments