ஈரானின் முன்னாள் ஜனாதிபதி அஹ்மதிநெஜாத், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பதிவு

ஈரானின் முன்னாள் ஜனாதிபதி அஹ்மதிநெஜாத், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பதிவு 0

🕔2.Jun 2024

ஈரான் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பதிவு செய்துள்ளார் என்று அந்த நாட்டுஅரசு தொலைக்காட்சி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஹெலிகொப்டர் விபத்தில் அப்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மரணித்தமையை அடுத்து, இம்மாதம் 28ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் போட்டியில் இருந்து தடுக்கப்படலாம்

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அத்தியட்சகராக, டொக்டர் ஜவாஹிர் மீண்டும் நியமனம்: பொறுக்க முடியாத பிரதேச வாதம் மீண்டும் தலையெடுப்பு

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அத்தியட்சகராக, டொக்டர் ஜவாஹிர் மீண்டும் நியமனம்: பொறுக்க முடியாத பிரதேச வாதம் மீண்டும் தலையெடுப்பு 0

🕔2.Jun 2024

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம். ஜவாஹிர், மீண்டும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டிலுள்ள வைத்தியசாலைகளுக்கு 62 பொறுப்பதிகாரிகளை நியமித்திருப்பதாகக் குறிப்பிட்டு, அவர்களின் பெயர்ப்பட்டியலை சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பி.ஜி. மஹிபால நேற்று (01) வெளியிட்டிருந்தார். அதனடிப்படையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின்

மேலும்...
அனைத்துப் பாடசாலைகளையும் நாளை மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானம்

அனைத்துப் பாடசாலைகளையும் நாளை மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானம் 0

🕔2.Jun 2024

நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (03) திங்கட்கிழமை மூடப்படும் என கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் அறிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடுமையான மழை மற்றும் வெள்ளம் – பல்வேறு பிராந்தியங்களை பாதித்துள்ளமையினால், மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு

மேலும்...
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அப்பா, மகள், பேத்தி மரணம்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அப்பா, மகள், பேத்தி மரணம் 0

🕔2.Jun 2024

ஏழு வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் இந்த துயரச் சம்பவம் இன்று (02) அதிகாலை நடந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கிய ஆண், அவரின் மகள் மற்றும் பேத்தி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தனர். கடும் மழையினால் அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள

மேலும்...
‘நீலக் கொடி கடற்கரை’களாக நாட்டில் 28 இடங்களை மாற்றுவதற்கு நடவடிக்கை

‘நீலக் கொடி கடற்கரை’களாக நாட்டில் 28 இடங்களை மாற்றுவதற்கு நடவடிக்கை 0

🕔2.Jun 2024

– முனீரா அபூபக்கர் – நாட்டில் உள்ள 28 கடற்கரைப் பகுதிகள் ‘நீலக் கொடி கடற்கரைப் பகுதி’களாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அதன் முதற்கட்டமாக உனவட்டுன, பெந்தோட்டை, பாசிக்குடா மற்றும் அறுகம்பே ஆகிய கரையோரப் பகுதிகளில் நீலக்கொடி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

மேலும்...
மண்மேடு சரிந்ததில் இருவர் உயிரிழப்பு

மண்மேடு சரிந்ததில் இருவர் உயிரிழப்பு 0

🕔2.Jun 2024

வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், பல்லேவெல – தெய்யந்தர பகுதியில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெனகம பிரதேசத்தைச் சேர்ந்த 20 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிதுள்ளனர். இதேவேளை, நேற்று (01) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்து எல்லேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் சடலங்கள்

மேலும்...
பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கப் போராட்டம்: அரசுக்கு 150 மில்லியன் ரூபாய் நஷ்டம்

பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கப் போராட்டம்: அரசுக்கு 150 மில்லியன் ரூபாய் நஷ்டம் 0

🕔1.Jun 2024

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தினால், அரசுக்கு சுமார்150 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுடன்- அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்த ராஜங்க அமைச்சர், தொழிற் சங்கங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

மேலும்...
இஸ்ரேலின் யுத்த நிறுத்த யோசனையை ஏற்குமாறு, அமெரிக்க ஜனாதிபதி – ஹாமஸிடம் கோரிக்கை

இஸ்ரேலின் யுத்த நிறுத்த யோசனையை ஏற்குமாறு, அமெரிக்க ஜனாதிபதி – ஹாமஸிடம் கோரிக்கை 0

🕔1.Jun 2024

காஸாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் முன்வைத்துள்ள புதிய யோசனையை ஏற்குமாறு ஜனாதிபதி ஜோ பைடன் ஹமாஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுகுறித்துப் பேசும்போது, “இப்போது இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டது” என்றும் அவர் தெரிவித்தார். மூன்று பகுதிகள் கொண்ட இந்த முன்மொழிவு – ஆறு வார போர்நிறுத்தத்துடன் தொடங்கும். கூடவே இஸ்ரேல்

மேலும்...
திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை முடிவுகளை நிறுத்துவதற்கு முறையீடு செய்தமை, பாசிச புலிகள் மனநிலையின் தொடர்ச்சியாகும்: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் கண்டனம்

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை முடிவுகளை நிறுத்துவதற்கு முறையீடு செய்தமை, பாசிச புலிகள் மனநிலையின் தொடர்ச்சியாகும்: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் கண்டனம் 0

🕔1.Jun 2024

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் சுமார் 70 பேரின் க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை – இன ரீதியான வன்மம் என்பதனை துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது என, கிழக்கு மாகான பள்ளிவாசல்கள் மற்றும் நிறுவனங்கள் அமைப்பின் பொருளாளரும் கிழக்கின் கேடயம் அமைப்பின் தலைவருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்துள்ளார் ‘மாணவிகள் தமது மார்க்க விழுமியங்களுக்குக் கட்டுப்பட்டு பரீட்சை

மேலும்...
முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி, ஆதரவாளர் பட்டாளத்துடன் மக்கள் காங்கிரஸில் இணைவு

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி, ஆதரவாளர் பட்டாளத்துடன் மக்கள் காங்கிரஸில் இணைவு 0

🕔1.Jun 2024

– எம்.வை. அமீர் – முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபானின் மகனும், கடந்த பொதுத் தேர்தல் வேட்பாளருமான ரிஸ்லி முஸ்தபா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில், அதன் தலைவர் றிஷாட் பதியுதீன் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்டார். தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் ரிஸ்லி முஸ்தபா கல்வித் திட்டத்தின் பிரதித் தலைவருமான கலாநிதி

மேலும்...
பாடசாலை மாணவர்களிடம் புகையிலைப் பாவனை அதிகரிப்பு

பாடசாலை மாணவர்களிடம் புகையிலைப் பாவனை அதிகரிப்பு 0

🕔1.Jun 2024

இலங்கையில் பாடசாலை மாணவர்களிடம் புகையிலைப் பொருட்களின் பாவனை அதிகரித்து வருவது குறித்து சுகாதார நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நேற்றைய தினம் (31) இடம்பெற்ற உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில் உரையாற்றிய தேசிய அபாயகர போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் டொக்டர் ஷக்ய நாணயக்கார, பாடசாலைகளில் புகையிலைப் பாவனை அதிகரித்துள்ளதாக கூறினார். இந்தப் பொருட்களுக்கு அடிமையாகும் பிள்ளைகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்