ஈரானின் முன்னாள் ஜனாதிபதி அஹ்மதிநெஜாத், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பதிவு

🕔 June 2, 2024

ரான் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பதிவு செய்துள்ளார் என்று அந்த நாட்டுஅரசு தொலைக்காட்சி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஹெலிகொப்டர் விபத்தில் அப்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மரணித்தமையை அடுத்து, இம்மாதம் 28ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவர் போட்டியில் இருந்து தடுக்கப்படலாம் என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. ஈரானின் ஆத்மீகத் தலைவர் தலைமையிலான பாதுகாப்பு சபையானது (Guardian Council), வேட்பாளர்களை ஆய்வு செய்து – அவர்களில் தகுதியானவர்களின் பட்டியலை ஜூன் 11ஆம் திகதியன்று வெளியிடும்.

2005ஆம் ஆண்டு ஈரானின் ஜனாதிபதியாக முதலில் வெற்றிபெற்ற அஹ்மதிநெஜாத், 2013வரை பதவியில் இருந்தார். பின்னர் பதவிக்கால வரையறை காரணமாக அவரால் போட்டியிட முடியவில்லை.

இதன் பின்னர் 2017ஆம் ஆண்டு அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு – பாதுகாப்பு சபை தடை விதித்தது. அதற்கு ஒரு வருடத்தின் பின்னர் – ”அசியலுக்குள் அஹ்மதி நெஜாத் நுழைவது அவரினதும் நாட்டினதும் நலனுக்கு நல்லதல்ல” – என்று ஈரானின் ஆத்மீக உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கொமெய்னி எச்சரித்தார்.

ஆயத்துல்லா அலி கொமெய்னியின் வரம்பற்ற அதிகாரம் தொடர்பில் மீளய்வு செய்ய வேண்டும் என்று, அஹ்மதிநெஜாத் வெளிப்படையாகப் பரிந்துரைத்த பிறகு இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்