உலகின் மிகப்பெரும் பணக்காரர் ஈலோன் மஸ்க், ட்விட்டரை வாக்குகிறார்

உலகின் மிகப்பெரும் பணக்காரர் ஈலோன் மஸ்க், ட்விட்டரை வாக்குகிறார் 0

🕔26.Apr 2022

உலகின் மிகப்பெரிய பணக்காரரான ஈலோன் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கைப் பெறுமதியில் 14 லட்சத்து 95 ஆயிரத்து 100 கோடி ரூபா) வாங்குகிறார். இதனை ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. ட்விட்டர் இயக்குநர் சபை – ஈலோன் மஸ்க் இடையே நேற்று நடந்த நீண்ட நேர பேச்சுவார்த்தையில் ஈலோன் மஸ்கின்

மேலும்...
சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் பலியானவர்களின் உடல் பாகங்களை நாளை தோண்டியெடுக்க அனுமதி

சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் பலியானவர்களின் உடல் பாகங்களை நாளை தோண்டியெடுக்க அனுமதி 0

🕔26.Apr 2022

சாய்ந்தமருது பகுதியில் குண்டு வெடிக்கச் செய்து உயிரை மாய்த்துக் கொண்ட, ஈஸ்டர் தாக்குதல் தாரிகளின் உறவினர்களின் உடற்பாகங்கள் நாளை (27) தோண்டி எடுக்கப்படவுள்ளளன. கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் குண்டுத் தாக்குதல் நடத்திய மொஹமட் ஹஸ்துனின் மனைவியான புலஸ்தினி மகேந்திரன் என்றழைக்கப்படும் சாரா ஜெஸ்மின் என்பவரின் மரபணு (டிஎன்ஏ) மாதிரியை அடையாளம் காண்பதற்காக குறித்த உடற்பாகங்கள்

மேலும்...
இலங்கை வீரர் யுபுன்அபேகோன், இத்தாலியில் நடந்த தளகடப் போட்டியில் ஆசிய சாதனை

இலங்கை வீரர் யுபுன்அபேகோன், இத்தாலியில் நடந்த தளகடப் போட்டியில் ஆசிய சாதனை 0

🕔25.Apr 2022

இத்தாலியில் நேற்று நடைபெற்ற தடகளப் போட்டியில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் புதிய ஆசிய சாதனை படைத்துள்ளார். ஆண்களுக்கான 150 மீற்றர் ஓட்டத்தை 15.16 வினாடிகளில் நிறைவுசெய்து இவர் புதிய ஆசிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் இந்தத் தூரத்தை 2017ல் ஜப்பானின் யோஷிஹிடே கிரியு 15.35 வினாடிகளில் ஓடி சாதனை படைத்திருந்தார். இதன்போது இத்தாலியின்

மேலும்...
அரசாங்கத்துடன் என்னை இணைந்து விட்டவர் ஹக்கீம்; கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பு கிடைத்தால், தகுந்த பதிலளிப்பேன்: ஹாபிஸ் நசீர் எச்சரிக்கை

அரசாங்கத்துடன் என்னை இணைந்து விட்டவர் ஹக்கீம்; கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பு கிடைத்தால், தகுந்த பதிலளிப்பேன்: ஹாபிஸ் நசீர் எச்சரிக்கை 0

🕔25.Apr 2022

அரசாங்கத்துடன் தான் இணைந்து செயற்படுவதற்கு மு.கா தலைவர் ரஊப் ஹக்கீமே காரணம் என்றும், அவ்வாறிருக்கையில் விசாரணைகள் எவையுமின்றி தன்னை மு.காங்கிரஸில் இருந்து நீக்கி விட்டதாகக் கூறி, நாட்டை எவ்வாறு ஹக்கீம் தவறாக வழிநடத்த முடியும் எனவும், அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கேள்வியெழுப்பியுள்ளார். முஸ்லிம் காங்கிரஸை விட்டும் நீக்கியதாக கூறப்படும் எந்தத் தகவலும் இதுவரை தனக்கு

மேலும்...
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு த.தே.கூட்டமைப்பு ஆதரவளிக்கப் போவதில்லை: பேச்சாளர் சுமந்திரன் தெரிவிப்பு

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு த.தே.கூட்டமைப்பு ஆதரவளிக்கப் போவதில்லை: பேச்சாளர் சுமந்திரன் தெரிவிப்பு 0

🕔25.Apr 2022

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றிபெற்றதன் பின்னர் – என்ன நடக்கும் என்பது உறுதியாகத் தெரியாவிட்டால், அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். பெரும்பாலான மக்கள் கோரிக்கை விடுத்து வருவதால், ஜனாதிபதி முதலில் பதவி விலக வேண்டும் என்பதே தங்களின் முதன்மையான கோரிக்கை என

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குழுவினரை பாப்பரசர் சந்தித்தார்

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குழுவினரை பாப்பரசர் சந்தித்தார் 0

🕔25.Apr 2022

ஈஸ்டர் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட ஒரு குழுவினர், புனித பாப்பரசர் பிரான்சிஸ்ஸை வத்திக்கானில் இன்று (25) சந்தித்தனர். வத்திக்கானில் நடந்த புனித ஆராதனைக்குப் பிறகு, புனித திருத்தந்தை பிரான்சிஸ் – தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டி சந்தித்தார். இலங்கை அரசாங்கம் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணத் தவறியமையினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து இலங்கையர்களுக்காகவும் பிரார்த்திக்கும்

மேலும்...
விமானங்களைக் குத்தகைக்குப் பெறுவதை ஒத்தி வைக்குமாறு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவத்துக்கு கோப் குழு பரிந்துரை

விமானங்களைக் குத்தகைக்குப் பெறுவதை ஒத்தி வைக்குமாறு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவத்துக்கு கோப் குழு பரிந்துரை 0

🕔25.Apr 2022

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினால் 2022 தொடக்கம் 2025 வரையான காலப் பகுதியில் 21 விமானங்களை குத்தகைக்குப் பெற்றுக் கொள்வது தொடர்பான கொள்முதல் செயற்பாட்டை, மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) பரிந்துரைத்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு 21 விமானங்களை குத்தகைக்கு எடுப்பது தொடர்பில் ஏற்பட்ட கருத்தாடலைத் தொடர்ந்து இதுபற்றி

மேலும்...
இடைக்கால அரசாங்கம் அமைக்கத் தயார்: மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி அறிவிப்பு

இடைக்கால அரசாங்கம் அமைக்கத் தயார்: மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி அறிவிப்பு 0

🕔25.Apr 2022

இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண உடனடி நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இணக்கம் தெரிவிப்பதாக மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். 20ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க நாடாளுமன்றம் தீர்மானித்தால் அதற்கு ஆதரவளிக்கத் தயார் எனவும் ஜனாதிபதி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும்

மேலும்...
மறைந்த ஆசிரியரும் ஊடகவியலாளருமான மோகனதாஸ் இன, மத பேதங்களைக் கடந்து விளங்கியவர்: இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு

மறைந்த ஆசிரியரும் ஊடகவியலாளருமான மோகனதாஸ் இன, மத பேதங்களைக் கடந்து விளங்கியவர்: இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு 0

🕔24.Apr 2022

ஆசிரியர், ஊடகவியலாளர், கட்டுரையாளர், நேர்முகவியலாளர் மற்றும் நாடக ஆற்றுகைக் கலைஞர் என, தான் சார்ந்துள்ள துறைகளில் இன உறவு விரும்பியாகச் செயற்பட்ட பாக்கியராஜா மோகனதாஸின் இழப்பு – மிகுந்த கவலையை அளிப்பதாக, இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் -அதன் தலைவரும் இலக்கிய விமர்சகருமான ஜெஸ்மி எம். மூஸா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். அந்த

மேலும்...
நேற்று சம்பியன்; இன்று மரணம்: மனதைக் கலங்க வைக்கும் கவுசல்யாவின் இழப்பு

நேற்று சம்பியன்; இன்று மரணம்: மனதைக் கலங்க வைக்கும் கவுசல்யாவின் இழப்பு 0

🕔24.Apr 2022

இலங்கை மகளிருக்கான 400 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் சம்பியன் பட்டத்தை வென்ற கௌசல்யா மதுஷானி காலமானார். 26 வயதான குறித்த பெண், தும்மலசூரியவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தியகம – மஹிந்த ராஜபக்ஷ மைத்தானத்தில் நேற்று (24) நடைபெற்ற 100ஆவது தேசிய தடகள விளையாட்டுப் போட்டியில், சிறந்த தடைதாண்டலுக்கான

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும்: பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத்

மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும்: பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் 0

🕔24.Apr 2022

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் வலியுறுத்தியுள்ளார். இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பதற்கு வழிவிடுமாறு மஹிந்த ராஜபக்ஷவை கோரியிருந்த முன்னாள் அமைச்சர் டலஸ் அலகபெருமவின் கருத்துக்களை, தான் ஆமோதிப்பதாகவும் சரித்த ஹேரத் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ‘அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைத்து விரைவில் தேசிய அரசாங்கத்தை

மேலும்...
பெரும்பான்மையை  இழந்தது அரசாங்கம்: பிரதமர் பதவி விலகுவதற்கு 115 பேர் விருப்பம்

பெரும்பான்மையை இழந்தது அரசாங்கம்: பிரதமர் பதவி விலகுவதற்கு 115 பேர் விருப்பம் 0

🕔23.Apr 2022

மஹிந்த ராஜபக்ஷ – பிரதமர் பதவியிலிருந்து விலகி புதிய பிரதமரை நியமிக்க வேண்டும் என விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறுபான்மை ஆதரவினைக் கொண்ட பிரதமராகியுள்ளார். இதேவேளை, எதிர்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதை நிரூபிப்பதற்கு எதிர்கட்சி உறுப்பினர்களின் கையொப்பத்துடன்

மேலும்...
ரம்புக்கண சம்பவம்; எரிபொருள் பவுசருக்கு தீ வைத்ததாகக் கூறப்படும்  நபர் கைது: பொலிஸ் உறுதிப்படுத்தியது

ரம்புக்கண சம்பவம்; எரிபொருள் பவுசருக்கு தீ வைத்ததாகக் கூறப்படும் நபர் கைது: பொலிஸ் உறுதிப்படுத்தியது 0

🕔23.Apr 2022

ரம்புக்கண சம்பவத்தின் போது எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முயற்சித்ததாகக் கூறப்படும் நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். 27 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரை நேற்றிரவு பின்னவலயில் வைத்து கைது செய்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். முன்னதாக, குறித்த சந்தேக நபர்ட கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும்...
நான் நல்ல உடல் நிலையுடன் இருக்கிறேன்; சர்வ கட்சி அரசாங்கம் அமைந்தாலும் அதில் நான்தான் பிரதமர்: மஹிந்த தெரிவிப்பு

நான் நல்ல உடல் நிலையுடன் இருக்கிறேன்; சர்வ கட்சி அரசாங்கம் அமைந்தாலும் அதில் நான்தான் பிரதமர்: மஹிந்த தெரிவிப்பு 0

🕔23.Apr 2022

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடல்நிலை சரியில்லாமல் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியான வதந்திகளை, அவர் மறுத்துள்ளார். “இது முழுப் பொய், நான் ஒரு நோயாளியைப் பார்க்கக் கூட மருத்துவமனைக்குச் செல்லவில்லை, நான் நல்ல உடல் நிலையுடன் இருக்கிறேன். இன்றும் இந்த இளைஞர்களுடன் ஓட முடியும்” என்று நெத் எப்.எம் வானொலிக்கு

மேலும்...
மு.கா.விலிருந்து ஹாபிஸ் நசீர் நீக்கம்; ஏனைய மூன்று எம்.பிகளும் இடைநிறுத்தப் பட்டுள்ளதோடு, ஒழுக்காற்று விசாரணை நடத்தவும் தீர்மானம்

மு.கா.விலிருந்து ஹாபிஸ் நசீர் நீக்கம்; ஏனைய மூன்று எம்.பிகளும் இடைநிறுத்தப் பட்டுள்ளதோடு, ஒழுக்காற்று விசாரணை நடத்தவும் தீர்மானம் 0

🕔22.Apr 2022

– மரைக்கார் – அமைச்சர் ஹாபிஸ் நாசீர் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அந்தக் கட்சியின் உயர்பீடக் கூட்டம் இன்று (22) நடைபெற்ற போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தவிர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் கட்சியின் தீர்மானத்தை மீறி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்