
இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண உடனடி நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இணக்கம் தெரிவிப்பதாக மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
20ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க நாடாளுமன்றம் தீர்மானித்தால் அதற்கு ஆதரவளிக்கத் தயார் எனவும் ஜனாதிபதி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்களது முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துமாறு கடந்த வாரம் அறிக்கையொன்றில் மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெருக்கடிக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் ‘சங்க கட்டளை’ ஒன்றை பிரகடனப்படுத்துவோம் என மகா நாயக்கர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும் 20வது திருத்தத்தை நீக்கி 19வது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும் தேரர்கள் கோரியிருந்தனர்.



