இலங்கை வீரர் யுபுன்அபேகோன், இத்தாலியில் நடந்த தளகடப் போட்டியில் ஆசிய சாதனை

🕔 April 25, 2022

த்தாலியில் நேற்று நடைபெற்ற தடகளப் போட்டியில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் புதிய ஆசிய சாதனை படைத்துள்ளார்.

ஆண்களுக்கான 150 மீற்றர் ஓட்டத்தை 15.16 வினாடிகளில் நிறைவுசெய்து இவர் புதிய ஆசிய சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் இந்தத் தூரத்தை 2017ல் ஜப்பானின் யோஷிஹிடே கிரியு 15.35 வினாடிகளில் ஓடி சாதனை படைத்திருந்தார்.

இதன்போது இத்தாலியின் சிதுரு அலி 15.17 செக்கன்களில் ஓடி இரண்டாவது இடத்தைப் பிடித்தார், மற்றொரு இத்தாலிய வீரர் மாட்டியா ஃபர்லானி 15.76 வினாடிகளில் ஓடி மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதே போட்டியில் இலங்கையின் வினுர லக்மல் கலந்து கொண்டு 16.83 வினாடிகளில் ஓடி ஏழாவது இடத்தைப் பிடித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்