தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு கொவிட் தொற்று: பதில் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு கொவிட் தொற்று: பதில் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 0

🕔18.Feb 2021

ஒக்ஸ்ஃபோட் அஸ்ரா-செனகா தடுப்பூசி ஏற்றிக்கொண்ட சிலருக்கு கோவிட் வைரஸ் தொற்றியுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை காலை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “கொவிஷீல்ட் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட காலி மற்றும் கேகாலையை சேர்ந்தவர்களுக்கே கோவிட் வைரஸ்

மேலும்...
கொரோனா உடல் தகனம்: இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு ஏமாற்றமளிப்பதாக, அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு

கொரோனா உடல் தகனம்: இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு ஏமாற்றமளிப்பதாக, அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு 0

🕔18.Feb 2021

கொவிட்தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை பாரபட்சமாக தகனம் செய்யும் கொள்கையை முடிவுக்கு கொண்டு வருவதில் இருந்து இலங்கை அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவது ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைய்னா டெப்லிஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். கொவிட்-19 நோயால் மரணிக்கின்றவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில்

மேலும்...
அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அட்டாளைச்சேனை ஆறு: கழிவுகள் கொட்டப்படும் இடமாகுவதாக மக்கள் விசனம்

அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அட்டாளைச்சேனை ஆறு: கழிவுகள் கொட்டப்படும் இடமாகுவதாக மக்கள் விசனம் 0

🕔17.Feb 2021

– படங்கள்: ஹாசிம் சாலிஹ் – அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றங்கரையோரத்தில் குப்பை மற்றும் விலங்குக் கழிவுகள் மற்றும் இறந்த விலங்குகள் கொட்டப்படுவதால், ஆறும் – ஆறு சார்ந்த சூழலும் மாசடைவதோடு, பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. அட்டாளைச்சேனை பிரதேசத்தில் – குப்பைகளைக் கொட்டுவதற்கான பாரிய இடமொன்று அஷ்ரப் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு

மேலும்...
இலங்கை வரும் பாகிஸ்தான் பிரமரின் நாடாளுமன்ற உரை ரத்து

இலங்கை வரும் பாகிஸ்தான் பிரமரின் நாடாளுமன்ற உரை ரத்து 0

🕔17.Feb 2021

இலங்கைக்கு வருகை தரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இன்ரான் கான், நாடாளுமன்றில் உரையாற்றவிருந்த நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 24ஆம் திகதி இன்ரான் கான், இலங்கை நாடாளுமன்றில் உரையாற்றும் நிகழ்ச்சி நிரல், ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உத்தியோகத்தர் ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார். கொவிட் நிலைமைகளைக் கருத்திற் கொண்டே, பாகிஸ்தான் பிரதமரின் நாடாளுமன்ற உரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும்

மேலும்...
கொரோனா மரணங்கள்; 10 சத வீதத்தால் குறைவு: உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு

கொரோனா மரணங்கள்; 10 சத வீதத்தால் குறைவு: உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு 0

🕔17.Feb 2021

உலகளவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 10 சத வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தினுள் உலகம் முழுவதிலும் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த தகவல் பெறப்பட்டுள்ளது. மேலும் புதிதாக பதிவாகும் தொற்றாளர்கள் எண்ணிக்கை 16 சதவீதத்தினால் குறைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். அவர் மேலும்

மேலும்...
மேலுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

மேலுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு 0

🕔17.Feb 2021

கொரோனா வைரஸின் மற்றொரு புதிய வகையினை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸின் இன்னொரு புதிய வகையை பிரிட்டனில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. B.1.525 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை கொரோன வைரஸ், தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை

மேலும்...
மு.கா.வை நம்ப முடியாது; மாகாண சபைத் தேர்தலில் தனித்தே களமிறங்குவோம்: ஐ.ம.சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்

மு.கா.வை நம்ப முடியாது; மாகாண சபைத் தேர்தலில் தனித்தே களமிறங்குவோம்: ஐ.ம.சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் 0

🕔17.Feb 2021

– நூருல் ஹுதா உமர் – முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்த வேலைக்கு, கசையடி வாங்கிக்கொண்டுதான் ஐக்கிய மக்கள் சக்தியுடன் அரசியல் முன்னெடுப்பை செய்ய வேண்டும் என திருகோணலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். கல்முனையில் நேற்றிரவு (16) தனியார் விடுதி ஒன்றில் கல்முனை பிராந்திய ஆதரவாளர்களுடனான குறைகேள் சந்திப்பில் கலந்துகொண்டு

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை: நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று நடந்துள்ளது: ஞானசார தேரர்

ஈஸ்டர் தின தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை: நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று நடந்துள்ளது: ஞானசார தேரர் 0

🕔17.Feb 2021

ஈஸ்டர் தின தாக்குதல்களுடன் தொடர்புடைய பலர் வெளியில் இருக்கின்றனர். இதனால் எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற தாக்குதல் நடக்கலாம் என பொதுபலசேன அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்துவெளியிட்ட அவர்; “ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை; பேராயர் மெல்கம் ரஞ்சித், சட்ட மா அதிபர் ஆகியோருக்கு வழங்கப்படும்

ஈஸ்டர் தின தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை; பேராயர் மெல்கம் ரஞ்சித், சட்ட மா அதிபர் ஆகியோருக்கு வழங்கப்படும் 0

🕔16.Feb 2021

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை பிரதிகள் தயாரிக்கப்பட்ட பின்னர், உடனடியாக விசேட அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட இருப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று செவ்வாய்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் உடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக ஊடகவியலாளர்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம்: 19 பேர் பெற்றனர்; மூவர் நிராகரிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம்: 19 பேர் பெற்றனர்; மூவர் நிராகரிப்பு 0

🕔16.Feb 2021

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 19 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒக்ஸ்போட் அஸ்ட்ரா-ஸெனெகா கோவிட் தடுப்பூசி இன்று ராணுவ மருத்துவமனையில் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை கோவிட் -19 தடுப்பூசி பெற மறுத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ, மனுஷ நாணயகார, அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு, கல்முனை நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு, கல்முனை நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை 0

🕔16.Feb 2021

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியனுக்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கண்டன பேரணியின்போது, கல்முனை நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் தடையுத்தரவை மீறி செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அழைப்பாணை இன்று செவ்வாய்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் பொலிஸார் கையளித்தனர். இதன்போது கருத்து வெளியிட்ட அவர்; “இன்று கல்முனை நீதிமன்றத்தினால் எனக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தடை

மேலும்...
கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ளோருக்கு நேர்முகப் பரீட்சை: அட்டாளைச்சேனையில் நடைபெற்றது

கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ளோருக்கு நேர்முகப் பரீட்சை: அட்டாளைச்சேனையில் நடைபெற்றது 0

🕔16.Feb 2021

– எம்.ஜே.எம். சஜீத் – தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை நேற்று (15) அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசியபாடசாலை) நடைபெற்றது. அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி கே. புண்ணியமூர்த்தி தலைமையில் இந்த நேர்முகத் தேர்வு இடம்பெற்றது. இதற்கமைய இஸ்லாம், கணிதம், வணிக கல்வியும் மற்றும் கணக்கீடும்

மேலும்...
சூனிய அரசியல் செய்யும் மரிக்கார் எம்.பி, வாய்மூடி இருக்க வேண்டும்:  ஹாபிஸ் நசீர் எம்.பி எச்சரிக்கை

சூனிய அரசியல் செய்யும் மரிக்கார் எம்.பி, வாய்மூடி இருக்க வேண்டும்: ஹாபிஸ் நசீர் எம்.பி எச்சரிக்கை 0

🕔16.Feb 2021

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் செய்து கொண்ட தேசியப் பட்டியல் ஒப்பந்தத்தை உதாசீனம் செய்து – துரோகம் இழைத்த ஐக்கிய மக்கள் சக்திக்குப் பின்னால், முஸ்லிம்களை அணிதிரளச் செய்வது இனிமேலும் சாத்தியப்படாதென, முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.  சிறுபான்மை சமூகங்களின் (தமிழ், முஸ்லிம்) சுமார் 12 லட்சம் வாக்குகளைப்

மேலும்...
பதில் சுகாதார அமைச்சராக சன்ன ஜயசுமன நியமனம்

பதில் சுகாதார அமைச்சராக சன்ன ஜயசுமன நியமனம் 0

🕔16.Feb 2021

பதில் சுகாதார அமைச்சராக பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் இதற்கு முன்னர் ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை ராஜாங்க அமைச்சராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் இடத்துக்கு மேற்படி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும்...
சரத் வீரசேகர 01 கிலோ; நான் 100 கிலோ: ராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவிப்பு

சரத் வீரசேகர 01 கிலோ; நான் 100 கிலோ: ராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவிப்பு 0

🕔16.Feb 2021

“அரசியல் அளவில் மதிப்பீடு செய்தால் அமைச்சர் சரத் வீரசேகர 01 கிலோ, நான் 100 கிலோ” என, ராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நம்பிக்கைக்குரிய சரத் வீரசேகரவை விடவும் அரசியலில் – தான் அதிகம் சாதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்