நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம்: 19 பேர் பெற்றனர்; மூவர் நிராகரிப்பு

🕔 February 16, 2021

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 19 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒக்ஸ்போட் அஸ்ட்ரா-ஸெனெகா கோவிட் தடுப்பூசி இன்று ராணுவ மருத்துவமனையில் ஏற்றப்பட்டது.

இந்த நிலையில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை கோவிட் -19 தடுப்பூசி பெற மறுத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ, மனுஷ நாணயகார, அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே ஆகியோர் தடுப்பூசி பெறுவதை நிராகரித்துள்ளனர்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாதிக்கப்படக்கூடிய குழு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, தடுப்பூசி பெறுமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிக்கையில்; தடுப்பூசி பெறாமலிருப்பதற்கான தனிப்பட்ட முடிவை எடுத்துள்ளதாகக் கூறினார், பொதுமக்களிடமிருந்து அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் இருந்து ஒரு நபருக்கு தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காகவே, இவ்வாறு தடுப்பூசி பெற்றுக் கொள்வதைத் தான் தவிர்த்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசியல்வாதிகள் பொதுமக்களுடன் அதிகம் தொடர்பு கொண்டாலும், தடுப்பூசி பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை, பொதுமக்களில் ஒருவருக்கு வழங்குவது நியாயமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை, வெள்ளிக்கிழமை வரை மேற்கொள்ளப்படும்.

தொடர்பான செய்தி: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை: ஹரீன் நிராகரிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்