நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை: ஹரீன் நிராகரிப்பு

🕔 February 16, 2021

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெனாண்டோ, தான் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களில்அதிக பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தடுப்பூசி போட வழிவகை செய்யும் பொருட்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று கொழும்பிலுள்ள ராணுவ மருத்துவமனையில் தொடங்கியது. இந்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பொதுமக்கள் மற்றும் முன்னணியில் கடமையாற்றும் தொழிலாளர்களில் மிகவும் பாதிக்கக்கூடிய குழுவினருக்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்’ இது குறித்து ஹரீன் பெனாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

‘நாட்டில் குறைந்தது 01 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின்னரே, கொவிட் தடுப்பூசியை நான் பெற்றுக் கொள்வேன்’ எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் மேலும் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இவ்விடயங்களைப் பதிவிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்