கறுப்பு சீனி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் தீர்மானம்

🕔 February 16, 2021

றுப்பு சீனி (Brown sugar) இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, கரும்பு, சோளம், முந்திரி, மிளகு, மிளகு, கராம்பு, வெற்றிலை உற்பத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள் மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் வருடாந்த சீனித் தேவை 06 லட்சம் மெட்ரிக் டொன் ஆக உள்ள நிலையில், 120,000 மெட்ரிக் டொன் கறுப்பு சீனி வருடமொன்றுக்குத் தேவையாக உள்ளதாக ராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர கூறினார்.

சீனி இறக்குமறியை குறைப்பதன் மூலம், சீனி இறக்குமதிக்கான வருடாந்த செலவைக் குறைப்பதன் மூலம் 40 பில்லியன் ரூபாவை மிச்சப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்