ஈஸ்டர் தின தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை; பேராயர் மெல்கம் ரஞ்சித், சட்ட மா அதிபர் ஆகியோருக்கு வழங்கப்படும்

🕔 February 16, 2021

ஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை பிரதிகள் தயாரிக்கப்பட்ட பின்னர், உடனடியாக விசேட அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட இருப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இன்று செவ்வாய்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் உடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கம்மன்பில; நேற்றைய தின அமைச்சரவை கூட்டத்தில் விமல் வீரவன்ச – இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கேட்டதாகவும் கூறினார்.

இதன்போது இந்த அறிக்கையின் பிரதிகள் தயாரிக்கப்பட்ட பின்னர், விசேட அமைச்சரவை கூட்டத்தை நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்று, அமைச்சர் விமல் வீரவன்சவிடம் ஜனாதிபதி கூறியதாகவும் அமைச்சர் கம்மன்பில தெரிவித்தார்.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கையின் பிரதிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கம்மன்பில இதன்போது தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்