தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு கொவிட் தொற்று: பதில் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

🕔 February 18, 2021

க்ஸ்ஃபோட் அஸ்ரா-செனகா தடுப்பூசி ஏற்றிக்கொண்ட சிலருக்கு கோவிட் வைரஸ் தொற்றியுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை காலை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கொவிஷீல்ட் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட காலி மற்றும் கேகாலையை சேர்ந்தவர்களுக்கே கோவிட் வைரஸ் தொற்றியுள்ளது.

தடுப்பூசியை வழங்குவதால் மாத்திரம் பாதுகாப்பு கிடைக்காது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க மூன்று வாரங்கள் செல்லும்.

தடுப்பூசியை வழங்கும் போதே சிலருக்கு கோவிட் தொற்றி இருப்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசி வழங்கப்படுவதால், அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றாமல் இருக்கக் கூடாது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்