பொலிஸ் உத்தியோகத்தரின் நேர்மை; காலில் விழுந்த இளைஞர்: தம்புள்ளயில் நடந்த மனதைத் தொடும் நெகிழ்ச்சி சம்பவம்

பொலிஸ் உத்தியோகத்தரின் நேர்மை; காலில் விழுந்த இளைஞர்: தம்புள்ளயில் நடந்த மனதைத் தொடும் நெகிழ்ச்சி சம்பவம் 0

🕔8.Dec 2020

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் செய்த நல்ல காரியமொன்றினை அடுத்து நெகிழ்சியடைந்த இளைஞர் ஒருவர், குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் காலில் விழுந்து நன்றி தெரிவித்த சம்பவம் தம்புள்ளயில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது; தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு முன்னால் விழுந்து கிடந்த ‘பேர்ஸ்’ ஒன்றினை தம்புள்ள பொலிஸ் அதிகாரி ஒருவர் உரிய நபரிடம் வழங்கியுள்ளார். இதன்

மேலும்...
அட்டாளைச்சேனை – அக்கரைப்பற்று எல்லை உள்வீதிளுக்கு தடை; யாரின் தீர்மானம்: தவிசாளர் அமானுல்லா விளக்கம்

அட்டாளைச்சேனை – அக்கரைப்பற்று எல்லை உள்வீதிளுக்கு தடை; யாரின் தீர்மானம்: தவிசாளர் அமானுல்லா விளக்கம் 0

🕔8.Dec 2020

– முன்ஸிப் – அக்கரைப்பற்று – அட்டாளைச்சேனை எல்லையின் உள்வீதிகளில் போக்குவரத்தை தடைசெய்யும் வகையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் இன்று தடுப்புகள் இடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து இந்த நடவடிக்கை குறித்து விமர்சனங்களும் எழத் தொடங்கியுள்ளன. அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளரின் இந்த நடவடிக்கையானது, அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை மக்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்தும் என, இந்த

மேலும்...
நாட்டு வைத்தியர் தம்மிகவின் கொரோனா மருந்து; பெற்றுக் கொள்ள பெரும் நெரிசல்: பொலிஸாரும் வாங்கிச் சென்றனர்

நாட்டு வைத்தியர் தம்மிகவின் கொரோனா மருந்து; பெற்றுக் கொள்ள பெரும் நெரிசல்: பொலிஸாரும் வாங்கிச் சென்றனர் 0

🕔8.Dec 2020

கொரோனாவுக்கான மருந்து எனக் கூறி தம்மிக பண்டார எனும் நாட்டு வைத்தியர் ஒருவர் – தனது வீட்டின் முன்பாக வைத்து, இன்று 05 ஆயிரம் குடும்பங்களுக்கு அதனை வழங்கி வைத்தார். கேகாலை, ஹெட்டிமுல்ல – உமாகம பகுதியில் இவ்வாறு அவர் இந்த மருந்தை வழங்கி வைத்தார். ஏற்கனவே இவர் இவ்வாறு மருந்தை வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தமையினால், அவரின்

மேலும்...
90 வயது பெண்ணுக்கு கொவிட் தடுப்பு மருந்து: பிரித்தானியாவில் முதலாவதாக ஏற்றப்பட்டது

90 வயது பெண்ணுக்கு கொவிட் தடுப்பு மருந்து: பிரித்தானியாவில் முதலாவதாக ஏற்றப்பட்டது 0

🕔8.Dec 2020

பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ளன. மார்கரெட் கீனன் என்ற 90 வயது பெண்மணிக்கு முதலாவது மருந்து வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் 91வயதாகும் மார்கரெட் கீனன் கூறுகையில்; “கொவிட்ட 19க்கு எதிரான மருந்தை பெற்றுக் கொள்ளும் முதலாவது நபர் என்பதில் நான் பாக்கியம் பெற்றவாக கருதுகிறேன். இது

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்; அதிக விலையில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குகின்றமை அம்பலம்: 21 லட்சம் ரூபாவுக்கு ‘மண்’

அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்; அதிக விலையில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குகின்றமை அம்பலம்: 21 லட்சம் ரூபாவுக்கு ‘மண்’ 0

🕔8.Dec 2020

– அஹமட் – தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு அரசாங்கத்தின் நிவாரணப் பொருட்களை வழங்கும் நடவடிக்கையின் போது, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் – அதிக விலையில் பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகின்றமையினை ‘புதிது’ செய்தித்தளம் கண்டறிந்துள்ளது. அக்கரைப்பற்று பிரதேச செயலகம் – மக்களுக்கு வழங்கி வரும் நிவாரணப் பொருட்களின் விலைகளுடன், அட்டாளைச்சேனை பிரசே செயலகம் வழங்கும் பொருட்களின்

மேலும்...
இலங்கையின் மிகப் பெரிய காற்றாலை மின் உற்பத்தி நிலையம்; மன்னாரில் திறந்து வைப்பு

இலங்கையின் மிகப் பெரிய காற்றாலை மின் உற்பத்தி நிலையம்; மன்னாரில் திறந்து வைப்பு 0

🕔8.Dec 2020

மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் மிகப் பெரிய காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்கிழமை திறந்து வைத்தார். நாட்டின் மின் உற்பத்தியில் மற்றொரு வரலாற்று மைல்கல்லாக மேற்படி ‘தம்பபவனி’ காற்றாலை மின் நிலையம் தேசிய கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் முதல் நடவடிக்கையாக 100 மெகாவோட் மின்சாரத்தை இவ்வாரம் தொடக்கம் தேசிய

மேலும்...
உலக சுகாதார அமைப்பு அனுமதிக்கும் வரை, கொவிட் 19க்குரிய தடுப்பு மருந்தை இலங்கை பெறாது: டொக்டர் சுதத் சமரவீர

உலக சுகாதார அமைப்பு அனுமதிக்கும் வரை, கொவிட் 19க்குரிய தடுப்பு மருந்தை இலங்கை பெறாது: டொக்டர் சுதத் சமரவீர 0

🕔8.Dec 2020

உலக சுகாதார அமைப்பு அங்கிகரிக்கும் வரை, கொவிட் -19க்கான எந்தவித தடுப்பூசியையும் இலங்கை பெறாது என்று, சுகாதார அமைச்சின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை தேவையான குளிர்ந்த வெப்பநிலையின் கீழ் தடுப்பூசிகளை சேமித்து வைப்பதில் – நாடு நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடம் என்றும் அவர் கூறியுள்ளார். இங்கிலாந்தில்

மேலும்...
“தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர என்னிடம் வந்து அழுதார்”: நாடாளுமன்றில்  சரத் பொன்சேகா தெரிவிப்பு

“தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர என்னிடம் வந்து அழுதார்”: நாடாளுமன்றில் சரத் பொன்சேகா தெரிவிப்பு 0

🕔8.Dec 2020

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக தற்போது பதவி வகிக்கும் சரத் வீரசேகர தன்னிடம் வந்து அழுதார் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று திங்கட்கிழமைநாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். சரத் வீரசேகர சிவில் பாதுகாப்புப் படைப் பிரிவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட போது, தனக்கு வாகனம் மற்றும் பாதுகாப்பு வழங்கவில்லை என அப்போது ராணுவத் தளபதியாக இருந்த

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில்  நிவாரணப் பொருட்கள் விநியோகம் ஆரம்பம்: முழு விவரம் உள்ளே

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் நிவாரணப் பொருட்கள் விநியோகம் ஆரம்பம்: முழு விவரம் உள்ளே 0

🕔7.Dec 2020

– அஹமட் – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மக்களுக்கு அரசின் நிவாரணப் பொருட்களை வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. சமுர்த்தி பெறும் குடும்பங்கள் மற்றும் சமுர்த்தி பெறத் தகுதியுள்ள குடும்பங்களுக்கு இந்த

மேலும்...
‘நியாயமான விடயங்களை முன்வைத்துள்ளார்’: அலிசாஹிர் மௌலானாவின் ராஜிநாமா குறித்து ஹக்கீம் கருத்து

‘நியாயமான விடயங்களை முன்வைத்துள்ளார்’: அலிசாஹிர் மௌலானாவின் ராஜிநாமா குறித்து ஹக்கீம் கருத்து 0

🕔7.Dec 2020

அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு, கட்சியின் உயர்மட்ட குழுவும் அதி உயர் பீடமும் கூடவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஆராய்ந்த பின்னர் அடுத்த கட்ட முடிவு குறித்து கட்சி தீர்மானிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, முன்னாள் ராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா,

மேலும்...
ஒத்தி வைக்கப்பட்டுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

ஒத்தி வைக்கப்பட்டுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு 0

🕔7.Dec 2020

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதி குறித்து கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார். அதன்படி அடுத்த வருடம் மார்ச் 01ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. இந்த வருடம் நடைபெற வேண்டிய சாதாரண தரப் பரீட்சை, கொரோனா அச்சம் காரணமாக அடுத்த வருடம் ஜனவரி 18ஆம்

மேலும்...
உலகில் 22 நாடுகளில் கொரோனா மரணம் இல்லை: ‘வனடு’வில் ஒருவருக்கு மட்டும் தொற்று

உலகில் 22 நாடுகளில் கொரோனா மரணம் இல்லை: ‘வனடு’வில் ஒருவருக்கு மட்டும் தொற்று 0

🕔7.Dec 2020

– அஹமட் – உலகில் இதுவரையில் 22 நாடுகளில் கொரேனா மரணங்கள் எவையும் பதிவாகவில்லை. பட்டியலிடப்பட்ட 220 நாடுகளில் மேற்படி 22 நாடுகளிலும் இன்றைய தினம் வரை கொரோனா மரணங்கள் எவையும் பதிவாகவில்லை. மங்கோலியா, பூட்டான், கம்போடியா, சீசெல்ஸ், டொமினிகா, லாஓஸ், கிறின்லாந்து மற்றும் சொலமன் தீவுகள் ஆகியவை அந்த நாடுகளில் சிலவாகும். இதேவேளை வனடு

மேலும்...
கொரோனா; மேலும் மூவர் மரணம்: பலி எண்ணிக்கை 140 ஆக உயர்வு

கொரோனா; மேலும் மூவர் மரணம்: பலி எண்ணிக்கை 140 ஆக உயர்வு 0

🕔6.Dec 2020

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. அந்த வகையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 140 ஆக உயர்வடைந்துள்ளது. மரணித்தோர் விவரங்கள் வருமாறு; 1. கோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த 98 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 2. கஹதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான ஆண்

மேலும்...
நீதி அமைச்சு இடம் மாறுகிறது; இரண்டு வருடங்களுக்கு 40 கோடி வாடகை: எழுகிறது விமர்சனம்

நீதி அமைச்சு இடம் மாறுகிறது; இரண்டு வருடங்களுக்கு 40 கோடி வாடகை: எழுகிறது விமர்சனம் 0

🕔6.Dec 2020

நீதி அமைச்சினை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு உலக வர்த்தக மையத்துக்கு இடம்மாற்ற அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இதனடிப்படையில் குறித்த இரண்டு வருட காலப் பகுதிக்குமாக, 400 மில்லியன் (40 கோடி) ரூபாவுக்கும் அதிகமான தொகை வாடகையாகச் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கணக்கின் அடிப்படையில் மாதமொன்றுக்கு 160 மில்லியன் (1.6 கோடி) ரூபாவுக்கும் அதிகமான தொகை வாடகையாகச்

மேலும்...
அர்ஜுன் மகேந்திரன் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்; ‘இன்டர்போல்’ பிரதானியுடன் பேசியுள்ளேன்: அமைச்சர் வீரசேகர

அர்ஜுன் மகேந்திரன் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்; ‘இன்டர்போல்’ பிரதானியுடன் பேசியுள்ளேன்: அமைச்சர் வீரசேகர 0

🕔6.Dec 2020

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை சர்வதேச நியதிகளுக்கு அமைய நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். வெளிநாடொன்றில் வசிக்கும் ஒருவரை நாட்டுக்கு அழைத்து வரவேண்டுமாயின், அதற்காக இரு நாடுகளுக்கு இடையில் சர்வதேச உடன்படிக்கை ஒன்று இருத்தல் அவசியம். அது தொடர்பில் ‘இன்டபோல்’ எனப்படும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்