அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் நிவாரணப் பொருட்கள் விநியோகம் ஆரம்பம்: முழு விவரம் உள்ளே

🕔 December 7, 2020

– அஹமட் –

க்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மக்களுக்கு அரசின் நிவாரணப் பொருட்களை வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

சமுர்த்தி பெறும் குடும்பங்கள் மற்றும் சமுர்த்தி பெறத் தகுதியுள்ள குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

ஆரம்பத்தில் 05 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களும், பின்னர் மீண்டும் 05 ஆயிரம் பெறுமதியான பொருட்களுமாக மொத்தம் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்படவுள்ளன.

இந்த நிலையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 9107 குடும்பங்களுக்கு இவ்வாறு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக, பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 17 வகையான பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இதற்காக 09 கோடியே 10 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் பொருட்களின் தொகை மற்றும் எடை தொடர்பான விவரங்கள் எழுதப்பட்டு, பொதியினுள் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

மேற்படி நிவாரணப் பொதிகள் தொடர்பில் முறைப்பாடுகள் ஏதாவது இருந்தால், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரை பொதுமக்கள் தொடர்புகொள்ள முடியும்.

வழங்கப்படும் நிவாரணப் பொதியினுள் காணப்படும் பொருட்கள், அவற்றின் தொகை, எடை மற்றும் விலை பற்றிய விவரங்கள் வருமாறு

தொடர்பான செய்தி: அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்க தீர்மானம்: 223 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்