கொரோனா எனும் கொடிய நோய் ஒழிந்ததாக, மக்கள் கனவு காணத் தொடங்கலாம்: உலக சுகாதார அமைப்பின் செயலாளர் நம்பிக்கை தெரிவிப்பு

கொரோனா எனும் கொடிய நோய் ஒழிந்ததாக, மக்கள் கனவு காணத் தொடங்கலாம்: உலக சுகாதார அமைப்பின் செயலாளர் நம்பிக்கை தெரிவிப்பு 0

🕔6.Dec 2020

“கொரோனா தடுப்பூசி சோதனை முடிவுகள் சாதகமாக உள்ளதால், அந்த கொடிய தொற்று நோய் ஒழிந்ததாக, உலக மக்கள் கனவு காணத் தொடங்கலாம்,” என, உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலாளர், ரெட்ரொஸ் அதனோம் கேப்ரியாசெஸ் தெரிவித்துள்ளார். கொரோனா குறித்த உயர்மட்டக் குழுக் கூட்டம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், இணைய வீடியோ தொழில்நுட்பத்தின் வாயிலாக நடைபெற்ற

மேலும்...
நூறு கிலோ ஹெரோயின், 100 கிலோ ஐஸ், மாரவில பகுதியில் சிக்கியது: கடத்தியோரும் அகப்பட்டனர்

நூறு கிலோ ஹெரோயின், 100 கிலோ ஐஸ், மாரவில பகுதியில் சிக்கியது: கடத்தியோரும் அகப்பட்டனர் 0

🕔6.Dec 2020

ஹெரோயின் 100 கிலேகிராம் மற்றும் ஐஸ் போதைப்பொருள் 100 கிலோகிராம் ஆகியவற்றுடன் சந்தேக நபர்கள் நால்வர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். தொடுவாவ – மாரவில பகுதியில் மேற்படி சந்தேக நபர்களை, கலால் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதன்போது போதைப் பொருளை கடத்துவதற்குப் பயன்படுத்திய வாகனங்களையும் கலால் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இரண்டு கார்கள் உட்பட

மேலும்...
உடதலவின்ன படுகொலைக்கு 19 வருடங்கள்: மு.காங்கிரஸின் பெயரால் உல்லாசம் அனுபவிப்போருக்கு  தெரியுமா இது?

உடதலவின்ன படுகொலைக்கு 19 வருடங்கள்: மு.காங்கிரஸின் பெயரால் உல்லாசம் அனுபவிப்போருக்கு தெரியுமா இது? 0

🕔5.Dec 2020

– முகம்மத் இக்பால் – முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்காக இரத்தம் சிந்தி, உயிரை அர்ப்பணித்து, சொத்துக்களை இழந்தவர்கள் ஏராளம். பொருளார நிலையில் அடிமட்டத்தில் இருந்த பலர், இன்று கோடீஸ்வரர்களாகவும், அந்தஷ்தில் உயர்ந்தவர்களாகவும் இருப்பதற்கு கட்சியின் தொண்டர்கள்தான் பிரதான காரணமானவர்கள். முஸ்லிம் காங்கிரஸின் பயணத்தில் உடதலவின்ன படுகொலைக்கு இன்று 19 வருடங்கள் கடந்துள்ளன. கட்சியினால் நன்றாக அனுபவித்து இன்று உல்லாசமாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸில் இருந்து, முன்னாள் ராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா ராஜிநாமா; ஹக்கீமுக்கு கடிதம் மூலம்அறிவிப்பு

முஸ்லிம் காங்கிரஸில் இருந்து, முன்னாள் ராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா ராஜிநாமா; ஹக்கீமுக்கு கடிதம் மூலம்அறிவிப்பு 0

🕔5.Dec 2020

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து, அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ராஜிநாமா செய்துள்ளார். கொவிட் -19 பாதிப்பினால் உயிரிழக்கும் முஸ்லிம்களது ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தன்னால் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு கடந்த செவ்வாய்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அன்றைய தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்புரிமையில்

மேலும்...
நிலவில் கொடி நாட்டிய சீனா: அமெரிக்காவுக்கு அடுத்து சாதனை

நிலவில் கொடி நாட்டிய சீனா: அமெரிக்காவுக்கு அடுத்து சாதனை 0

🕔5.Dec 2020

நிலவில் தனது தேசியக் கொடியை முதன் முதலில் அமெரிக்கா நட்டு சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனா தனது தேசியக் கொடியை நிலவில் நட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் ஐந்து நட்சத்திரங்களைக் கொண்ட சீனாவின் செங்கொடி காணப்படும் படத்தை – சீன தேசிய விண்வெளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த படங்கள், கடந்த வியாழக்கிழமை நிலவின் பாறை மாதிரிகளுடன்,

மேலும்...
ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய செயலாளர் நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய செயலாளர் நியமனம் 0

🕔5.Dec 2020

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு ஷாமல் செனரத் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பதவிக்கு தான் நியமிக்கப்பட்டுள்ளதாக, வடமேல் மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஷாமல் செனரத் இதனைக்கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராகப் பதவி வகித்த அகிலவிராஜ் காரியவசம், சில வாரங்களுக்கு முன்னர் அந்தப் பதவியை ராஜிநாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்க தீர்மானம்: 223 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்க தீர்மானம்: 223 மில்லியன் ரூபா ஒதுக்கீடு 0

🕔4.Dec 2020

– அஹமட் – கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குடும்பங்களுக்கு தலா 05 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவு மற்றும் அத்தியவசியப் பொருட்களை அரசாங்கம் வழங்கவுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் பிரதேச செயலகப் பிரிவுகளான அக்கரைப்பற்றில் அண்ணளவாக 07 ஆயிரம்

மேலும்...
சுகாதார அமைச்சர் அருந்திய, கொரோனாவுக்கான ஆயுர்வேத மருந்து சட்ட விரோதமானது

சுகாதார அமைச்சர் அருந்திய, கொரோனாவுக்கான ஆயுர்வேத மருந்து சட்ட விரோதமானது 0

🕔4.Dec 2020

தம்மிக பண்டார எனும் நபரால் உருவாக்கப்பட்ட ‘கொவிட் – 19 ஐ குணப்படுத்தும்’ மருந்து எனக் கூறப்படுவது சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டது என்றும், அந்த மருந்து பொதுமக்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தினால், ஆயுர்வேத வைததியர்கள் பொறுப்பேற்கக்கூடாது என்றும் பட்டப் பின் படிப்புடைய சிரேஷ்ட ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தன்னை சுதேச மருத்துவர் என்று கூறும் மேற்படி

மேலும்...
உலகளவில் கொரோனா மரணம் 15 லட்சத்தை தாண்டியது: முதலிடத்தில் அமெரிக்கா

உலகளவில் கொரோனா மரணம் 15 லட்சத்தை தாண்டியது: முதலிடத்தில் அமெரிக்கா 0

🕔4.Dec 2020

உலகளவில் கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று வெள்ளிக்கிழமை 15 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரையில் 06 கோடியே 56 லட்சத்து 298 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், மேற்படி மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில் 04 கோடி 54 லட்சத்து 31 ஆயிரத்து 944 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனாவினால் 15 லட்சத்து 14,827 பேர்

மேலும்...
சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு விளக்க மறியல்: நீதிமன்றம் உத்தரவு

சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு விளக்க மறியல்: நீதிமன்றம் உத்தரவு 0

🕔4.Dec 2020

பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் கொவிட்-19 கடமைகளை முன்னெடுத்த பொது சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய கொவிட்-19 தொற்றாளர் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் கொரோனா நோயாளர்களை கடந்த புதன்கிழமை வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டனர்.  இதன்போது கொரோனா தொற்றாளர் ஒருவர்,

மேலும்...
மனநோய் சிகிச்சைக்கான மருந்துகள், வன்முறை நடத்தைகளை ஏற்படுத்தாது: பொலிஸ் பேச்சாளரின் கருத்துக்கு வைத்தியர்கள் சங்கம் பதில்

மனநோய் சிகிச்சைக்கான மருந்துகள், வன்முறை நடத்தைகளை ஏற்படுத்தாது: பொலிஸ் பேச்சாளரின் கருத்துக்கு வைத்தியர்கள் சங்கம் பதில் 0

🕔4.Dec 2020

மனநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளினால் வன்முறை நடத்தைகள் ஏற்பட மாட்டாது என இலங்கை மனநோய் வைத்தியர்கள் சங்கம் (Sri Lanka College of Psychiatrists) அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. மனநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளை கைதிகள் பயன்படுத்தியமையே, மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை நடத்தைக்கு காரணம் என கூறுவது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதாக அமையும்

மேலும்...
ஷரியா சட்டத்தை அச்சுறுத்துவதற்காக பயன்படுத்தலாம் என முஸ்லிம்கள் கருதக் கூடாது: பேராயர் மல்கம் ரஞ்சித்

ஷரியா சட்டத்தை அச்சுறுத்துவதற்காக பயன்படுத்தலாம் என முஸ்லிம்கள் கருதக் கூடாது: பேராயர் மல்கம் ரஞ்சித் 0

🕔4.Dec 2020

முஸ்லிம்கள் ஷரியா சட்டத்தினை முக்கியமானதாக கருதலாம் அதற்காக அதனை இலங்கையின் சட்டமாக அர்த்தப்படுத்த முடியாது என, பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஷரியா சட்டத்தினை ஏனைய சமூகங்களின் மீது திணிக்கலாம் என்றோ அல்லது அதனை ஏனைய சமூகங்கள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கோ அச்சுறுத்துவதற்கோ பயன்படுத்தலாம் என்றோ முஸ்லிம்கள் கருதக்கூடாது எனவும் மல்கம் ரஞ்சித் கூறியுள்ளார். ஐக்கிய

மேலும்...
ஐந்து ஆணைக்குழுக்களின் தலைவர்களாக ஜனாதிபதி பிரேரித்த பெயர்களுக்கு நாடாளுமன்ற பேரவை ஒப்புதல்

ஐந்து ஆணைக்குழுக்களின் தலைவர்களாக ஜனாதிபதி பிரேரித்த பெயர்களுக்கு நாடாளுமன்ற பேரவை ஒப்புதல் 0

🕔3.Dec 2020

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட ஐந்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு தலைவர்களாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரேரித்த பெயர்களுக்கும் நாடாளுமன்ற பேரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ஐந்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் பிரேரிக்கப்பட்ட புதிய தலைவர்களின் விவரம் வருமாறு; தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு – நிமல் புஞ்சிஹேவா பொதுச் சேவைகள் ஆணைக்குழு – உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர்

மேலும்...
மினுவாங்கொட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; பிக்குவின் பொய் முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது: ஆணைக்குழுவில் சாட்சியம்

மினுவாங்கொட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; பிக்குவின் பொய் முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது: ஆணைக்குழுவில் சாட்சியம் 0

🕔3.Dec 2020

– எம்.எப்.எம். பஸீர் – ஈஸ்டர் தின தாக்குதல்களின் பின்னர் கடந்த 2019 மே மாதம் 13 ஆம் திகதி மினுவாங்கொட பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு அடித்தளமிட்டதாக நம்பப்படும் சம்பவம், பொய்யான விடயம் ஒன்றினை மையப்படுத்தியதென, அந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்ததாக கூறப்படும் இளம் பெளத்த பிக்கு (பயில் நிலை ) ஜனாதிபதி

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு 0

🕔3.Dec 2020

க.பொ.த. சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதமளவில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் ஏற்பட்டமையினால், திட்டமிடப்பட்ட திகதியில் சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கு முடியாது என ஏற்கனவே கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார். எனினும் பரீட்சைக்கான புதிய திகதியை 06 வாரங்களுக்கு முன்னர் அறிவிப்பதாகவும் கல்வி அமைச்சர் கூறியிருந்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்