தலைப்புச் செய்திகள்

ஐந்து ஆணைக்குழுக்களின் தலைவர்களாக ஜனாதிபதி பிரேரித்த பெயர்களுக்கு நாடாளுமன்ற பேரவை ஒப்புதல்

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட ஐந்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு தலைவர்களாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரேரித்த பெயர்களுக்கும் நாடாளுமன்ற பேரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

ஐந்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் பிரேரிக்கப்பட்ட புதிய தலைவர்களின் விவரம் வருமாறு;

  • தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு – நிமல் புஞ்சிஹேவா
  • பொதுச் சேவைகள் ஆணைக்குழு – உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் ஜெகத் பாலபட்டபெந்தி
  • தேசிய பொலிஸ் ஆணைக்குழு – முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெனாண்டோ
  • லஞ்ச ஊழல் விசாணை ஆணைக்குழு – உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் ஈவா வனசுந்தர
  • நிதி ஆணைக்குழு – சுமித் அபேசிங்க