நூறு கிலோ ஹெரோயின், 100 கிலோ ஐஸ், மாரவில பகுதியில் சிக்கியது: கடத்தியோரும் அகப்பட்டனர்

🕔 December 6, 2020

ஹெரோயின் 100 கிலேகிராம் மற்றும் ஐஸ் போதைப்பொருள் 100 கிலோகிராம் ஆகியவற்றுடன் சந்தேக நபர்கள் நால்வர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடுவாவ – மாரவில பகுதியில் மேற்படி சந்தேக நபர்களை, கலால் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதன்போது போதைப் பொருளை கடத்துவதற்குப் பயன்படுத்திய வாகனங்களையும் கலால் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இரண்டு கார்கள் உட்பட நான்கு வாகனங்களை இந்த நடவடிக்கையின் போது அதிகாரிகள் கைப்பற்றியதாக கலால் திணைக்கள பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

Comments