அர்ஜுன் மகேந்திரன் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்; ‘இன்டர்போல்’ பிரதானியுடன் பேசியுள்ளேன்: அமைச்சர் வீரசேகர

🕔 December 6, 2020

த்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை சர்வதேச நியதிகளுக்கு அமைய நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

வெளிநாடொன்றில் வசிக்கும் ஒருவரை நாட்டுக்கு அழைத்து வரவேண்டுமாயின், அதற்காக இரு நாடுகளுக்கு இடையில் சர்வதேச உடன்படிக்கை ஒன்று இருத்தல் அவசியம்.

அது தொடர்பில் ‘இன்டபோல்’ எனப்படும் சர்வதேச பொலிஸ் பிரதானியுடன் நேற்று முன்தினம் தாம் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தநிலையில் அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அவரை நாட்டுக்கு அழைத்து வந்து, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.

கே.பி. என்ற குமரன் பத்மநாதனை அழைத்து வந்தது போல, நாட்டுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தி கோடிக்கணக்கிலான நிதி மோசடியை செய்த அர்ஜூன் மகேந்திரனையும் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்