
– அஹமட் –
உலகில் இதுவரையில் 22 நாடுகளில் கொரேனா மரணங்கள் எவையும் பதிவாகவில்லை.
பட்டியலிடப்பட்ட 220 நாடுகளில் மேற்படி 22 நாடுகளிலும் இன்றைய தினம் வரை கொரோனா மரணங்கள் எவையும் பதிவாகவில்லை.
மங்கோலியா, பூட்டான், கம்போடியா, சீசெல்ஸ், டொமினிகா, லாஓஸ், கிறின்லாந்து மற்றும் சொலமன் தீவுகள் ஆகியவை அந்த நாடுகளில் சிலவாகும்.
இதேவேளை வனடு (Vanuatu) எனும் நாட்டில் ஒருவர் மாத்திரமே இதுவரையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். உலகில் மிகக் குறைந்தோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடு இதுவாகும். அந்த நாட்டிலும் கொரோனா மரணங்கள் எவையும் பதிவாகவில்லை. இந்த நாட்டின் சனத்தொகை 310,185 ஆகும்.
உலகில் குறைந்தளவு சனத்தொகையைக் கொண்ட வத்திக்கானில் 27 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அங்கு அதன் காரணமாக மரணங்கள் எவையும் பதிவாகவில்லை.



