கொரோனா; மேலும் மூவர் மரணம்: பலி எண்ணிக்கை 140 ஆக உயர்வு

🕔 December 6, 2020

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

அந்த வகையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 140 ஆக உயர்வடைந்துள்ளது.

மரணித்தோர் விவரங்கள் வருமாறு;

1. கோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த 98 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

2. கஹதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவர் நேற்று ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

3. மக்கொன பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவர் நேற்றைய தினம் ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை நாட்டில் இதுவரை 27,877 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் அவர்களில் 20,460 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்திருக்கிறது.

Comments