பாடசாலைகளை 04 கட்டங்களாகத் திறக்க, கல்வியமைச்சு தீர்மானம்

பாடசாலைகளை 04 கட்டங்களாகத் திறக்க, கல்வியமைச்சு தீர்மானம் 0

🕔9.Jun 2020

எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நான்கு கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளள. அதற்கிணங்க முதற்கட்டமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்காக  ஜூன் 29ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டாம் கட்டமாக, தரம் 05 – 11 – 13 ஆகிய மாணவர்களின்

மேலும்...
வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களைத் தெரியப்படுத்தும் வர்த்தமானி வெளியீடு

வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களைத் தெரியப்படுத்தும் வர்த்தமானி வெளியீடு 0

🕔9.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 22 மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களை தெரிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில் 22 மாவட்டங்களில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பெயர்களும் மற்றும் வாக்குச் சாவடிகளின் பெயர்களும்

மேலும்...
எனது தோல்வியை முன்கூட்டியே அறிந்திருந்தேன்; குடும்பத்தாருக்கும் சொல்லி வைத்திருந்தேன்: மஹிந்த

எனது தோல்வியை முன்கூட்டியே அறிந்திருந்தேன்; குடும்பத்தாருக்கும் சொல்லி வைத்திருந்தேன்: மஹிந்த 0

🕔9.Jun 2020

“2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவேன் என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தேன். இது குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தேன்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் 50 வருடகால அரசியல் பயணம் தொடர்பில் சுயாதீன தொலைக்காட்சியில் நடைபெற்ற அனுபவப் பகிர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல் திகதி, இந்த வாரத்துக்குள் அறிவிக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் திகதி, இந்த வாரத்துக்குள் அறிவிக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு 0

🕔8.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியை இந்த வாரத்துக்குள் அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட மூவரும் இன்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடியமையை அடுத்து இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை, தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று காலை 11.10 அளவில் ஆரம்பமாகியது. ஏற்கனவே, ஏப்ரல் 25ஆம் திகதி

மேலும்...
ஊடகவியலாளர் மஞ்சு, பௌத்த பிக்கு ஆனார்: பெயரும் மாறியது

ஊடகவியலாளர் மஞ்சு, பௌத்த பிக்கு ஆனார்: பெயரும் மாறியது 0

🕔8.Jun 2020

சுவர்ணவாஹினி மற்றும் சிரச தொலைக்காட்சிகளில் கடமையாற்றிய ஊடகவியலாளர் மஞ்சு தெனுவர, இன்று திங்கட்கிழமை பௌத்த பிக்குவாக துறவு பூண்டுள்ளார். ‘மினுவாங்கொட பிக்ஷு அப்ஹ்யாச’ நிறுவகத்தில், அவர் இவ்வாறு துறவு பூண்டார். சிரச தொலைக்காட்சியில் விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகளை வழங்கியமையினை அடுத்து, மஞ்சு தெனுவர – ஓர் ஊடகவியலாளராக பிரபலமடைந்தார். அதற்கு முன்பு அவர் சுவர்ணவாஹினி தொலைக்காடசியில்

மேலும்...
கொரோனா தொற்றினால் இறந்தோரின் உடலை எரிப்பதற்கு எதிரான மனு; இன்று விசாரணை

கொரோனா தொற்றினால் இறந்தோரின் உடலை எரிப்பதற்கு எதிரான மனு; இன்று விசாரணை 0

🕔8.Jun 2020

– அஸ்லம் எஸ். மௌலானா – கொரோனா தொற்று நோயினால் மரணிப்போரின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று திங்கட்கிழமை (08) விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது மனுதாரர் அலிஸாஹிர் மௌலானாவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம்

மேலும்...
கல்முனையில் தீ விபத்து: பல சரக்கு கடைகள் நாசம்

கல்முனையில் தீ விபத்து: பல சரக்கு கடைகள் நாசம் 0

🕔7.Jun 2020

– ஏ.எல்.எம். ஷினாஸ், றாசிக் நபாயிஸ் – கல்முனை அம்மன் கோயில் வீதியில் அமைந்துள்ள பல சரக்கு விற்பனை நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் இரண்டு கடைகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் முற்றாக எரிந்து நாசமாகின.  கடையின் பின் புறமாக வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடை உரிமையாளரின்

மேலும்...
மஹிந்த தேசப்பிரியவின் மேற்பார்வையில், தேர்தல் ஒத்திகை: அம்பலங்கொடயில் நடைபெறுகிறது

மஹிந்த தேசப்பிரியவின் மேற்பார்வையில், தேர்தல் ஒத்திகை: அம்பலங்கொடயில் நடைபெறுகிறது 0

🕔7.Jun 2020

தேர்தல் ஒத்திகையொன்று (மாதிரி வாக்கெடுப்பு) அம்பலங்கொட விலேகொட தம்மயுக்திகரம விகாரையில் நடைபெற்று வருகிறது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரியவின் மேற்பார்கையின் கீழ், இந்த தேர்தல் ஒத்திகை இடம்பெறுகிறது. கொரோனா தொற்றுக்கிடையில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டியுள்ளதால், உரிய சுகாதார முறையைப் பின்பற்றி எவ்வாறு தேர்தலை நடத்துவது என்பதை ஒத்திகையாக செய்து பார்ப்பதே இதன்

மேலும்...
நாட்டின் வான் பரப்பில் மர்ம உயிரினம்: கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவிப்பு

நாட்டின் வான் பரப்பில் மர்ம உயிரினம்: கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவிப்பு 0

🕔7.Jun 2020

நாட்டின் வான்பரப்பில் மர்மான உயிரினம் ஒன்று சுற்றித் திரிவதாக கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தெளிவாக அடையாளம் காணப்படாத உயிரினம் ஒன்றே இவ்வாறு சுற்றித் திரிவதாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார். “இது குறித்த காணொளி ஒன்றும் கிடைத்துள்ளது. எவ்வாறாயினும் இது எந்த வகை உயிரினம் என்பது குறித்து இதுவரை அடையாளம்

மேலும்...
சிறப்பு ஒத்திகைத் தேர்தல்: நாளை அம்பலாங்கொடயில்

சிறப்பு ஒத்திகைத் தேர்தல்: நாளை அம்பலாங்கொடயில் 0

🕔6.Jun 2020

சிறப்பு ஒத்திகைத் தேர்தலொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல்கள் ஆணைக்குழு – அம்பலாங்கொடயில் இந்தத் தேர்தலை நடத்தவுள்ளது. கொரோனா நோய்த் தொற்றுக்கு இடையே, தனிநபர் இடைவெளிகளைப் பேணியபடி, சுகாதார விதிமுறைகளின் படி தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பதைப் புரிந்துகொள்ளும் பொருட்டு நாளைய தினம் இந்த சிறப்பு ஒத்திகை தேர்தல் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான

மேலும்...
‘மாஸ்க்’ தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது

‘மாஸ்க்’ தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது 0

🕔6.Jun 2020

கொரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்க – பொது இடங்களில் மக்கள் கூடும்போது மாஸ்க் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. மாஸ்க் அணிவதால் கொரோனா வைரஸ் பரவாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் முன்பு கூறியிருந்த நிலையில், தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றியுள்ளது. தொற்றைப் பரப்பக்கூடிய நுண்ணிய

மேலும்...
தெற்கில் நடமாடும் நிர்வாண நபர்கள்; அச்சத்தில் மக்கள்: பொலிஸார் சுற்றி வளைப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிப்பு

தெற்கில் நடமாடும் நிர்வாண நபர்கள்; அச்சத்தில் மக்கள்: பொலிஸார் சுற்றி வளைப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிப்பு 0

🕔6.Jun 2020

நிர்வாணமாக இரவு வேளைகளில் நடமாடும் நபர்களால், காலி மாவட்டத்தில் பெரும் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேசத்தில் இரவில் நடமாடுவதாக கூறப்படும் நிர்வாண நபர்களை கண்டுபிடிக்க பொலிஸார் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். நெலுவ, ஹினிதும, தவலம, உடுகம மற்றும் வந்துரப பகுதிகளில் பொலிஸ் குழுக்கள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நெலுவ

மேலும்...
அரச செலவுகளுக்கு ஒன்றிணைந்த நிதியத்திலிருந்து பணத்தை பெறுமாறு ஜனாதிபதி உத்தரவு

அரச செலவுகளுக்கு ஒன்றிணைந்த நிதியத்திலிருந்து பணத்தை பெறுமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔5.Jun 2020

ஜூலை முதலாம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச செலவுகளுக்கு ஒன்றிணைந்த நிதியத்திலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களுக்கு அமைய இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 03 மாதங்களுக்கு அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட

மேலும்...
அரச உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும் போது, படம் பிடித்து வெளியிடும் அதிகாரிகள் குறித்து முறையிடத் தீர்மானம்

அரச உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும் போது, படம் பிடித்து வெளியிடும் அதிகாரிகள் குறித்து முறையிடத் தீர்மானம் 0

🕔4.Jun 2020

– அஹமட் – அரச நிவாரணங்கள் மற்றும் உதவிக் கொடுப்பனவுகளை பிரதேச அரச நிறுவனங்கள் ஊடாக பொதுமக்களுக்கு வழங்கும் போது, அவற்றினை படம் பிடித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் – சில உத்தியோகத்தர்கள் வெளியிடுகின்றமை குறித்து சமூக ஆர்வலர்கள் தமது கண்டனங்ளைத் தெரிவிக்கின்றனர். உதாரணமாக கோரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு அரசு வழங்கிய 05 ஆயிரம் ரூபா

மேலும்...
மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார்

மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார் 0

🕔4.Jun 2020

– பாறுக் ஷிஹான் – கஞ்சா மற்றும் வாள் ஆகியவற்றை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை, பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் கடத்தியவரை கல்முனை பொலிஸார் இன்று வியாழக்கிழமை கைது செய்தனர். மருதமுனை பகுதியில் அண்மைக்காலமாக இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட புலனாய்வு பிரிவு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்