ஹர்ஜன் அலெக்சாண்டர் ஆனார் அர்ஜுன் மகேந்திரன்: மத்திய வங்கி முன்னாள் ஆளுநரின் ‘ஜில்மல்’

ஹர்ஜன் அலெக்சாண்டர் ஆனார் அர்ஜுன் மகேந்திரன்: மத்திய வங்கி முன்னாள் ஆளுநரின் ‘ஜில்மல்’ 0

🕔16.Jun 2020

மத்திய வங்கி முறிகள் விநியோக ஊழல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு தலைமறைவாகியுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தனது பெயரை மாற்றியுள்ளதாக சர்வதேச பொலிஸார் இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது. அர்ஜுன் மகேந்திரன் தனது பெயரை ஹர்ஜன் அலெக்சாண்டர் என மாற்றியுள்ளார் என சர்வதேச போலீஸார் தெரிவித்துள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் கொழும்பு விசேட மூவரடங்கிய

மேலும்...
சம்மாந்துறையில் தனி நபரை திருப்திப்படுத்தும் வகையில், மு.கா. தலைமை  செயற்படுகிறது: மாஹிர் குற்றச்சாட்டு

சம்மாந்துறையில் தனி நபரை திருப்திப்படுத்தும் வகையில், மு.கா. தலைமை செயற்படுகிறது: மாஹிர் குற்றச்சாட்டு 0

🕔16.Jun 2020

– எம்.எம். ஜபீர் – சம்மாந்துறை தொகுதியில் தனிநபரை மாத்திரம் திருப்திப்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுவதாகவும், மக்களை பற்றிய எந்த விடயமும் அந்தக் கட்சி கவனத்தில் கொள்ளப்படுவதில்லை எனவும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமான ஐ.எல்.எம். மாஹிர் குற்றம்சாட்டியுள்ளார். நாவிதன்வெளி 06ஆம் கிராமத்தில்

மேலும்...
ஐ.தே.கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கப்பட்டமைக்கு இடைக்காலத் தடை: 22ஆம் திகதி நீதிமன்றம் தீர்மானம்

ஐ.தே.கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கப்பட்டமைக்கு இடைக்காலத் தடை: 22ஆம் திகதி நீதிமன்றம் தீர்மானம் 0

🕔16.Jun 2020

ஐக்கிய தேசியக் கட்சி தனது உறுப்பினர்கள் 99 பேரை அங்கத்துவத்திலிருந்து நீக்கியமைக்கு இடைக்காலத் தடை விதிப்பதா இல்லையா என்பதை எதிர்வரும் 22ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த, தமது கட்சி உறுப்பினர்கள் 99 பெரின் அங்கத்துவங்களை ஐக்கிய தேசியக் கட்சி கட்சி நீக்கியுள்ளது. ஐக்கிய

மேலும்...
ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாகத் தெரிவிப்பு

ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாகத் தெரிவிப்பு 0

🕔16.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தலலுக்கான ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் இதுவரையில் அச்சிடப்பட்டுள்ளன என்று அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வாக்குச்சீட்டுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அநுராதபுரம், பொலன்னறுவை, மாத்தளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் வாக்குச்சீட்டுக்களே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்னும் 04 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் இன்னும் இரண்டு நாட்களில் அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்ழுவிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும்

மேலும்...
‘ஜோராக’ மறத்தல்: முஸ்லிம் கட்சிகளின் நயவஞ்சக அரசியல்

‘ஜோராக’ மறத்தல்: முஸ்லிம் கட்சிகளின் நயவஞ்சக அரசியல் 0

🕔16.Jun 2020

– மும்மது தம்பி மரைக்கார் – கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை எரித்தமையை அரசாங்கத்துக்கு எதிரான தேர்தல் பிரசாரமாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைத்துப் போட்டியிடும் முஸ்லிம் கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இந்த நிலையில்தான் கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களை முகாமை செய்வதற்காக சிங்களவர்களை மட்டும் கொண்ட செயலணியொன்றினை ஜனாதிபதி நியமித்தார். இதையும் அரசாங்கத்துக்கு எதிரான

மேலும்...
ஊர்வலங்கள் வேண்டாம்; கூட்டங்களுக்கு மக்களை அழைத்து வந்து நிரப்ப வேண்டாம்: தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை

ஊர்வலங்கள் வேண்டாம்; கூட்டங்களுக்கு மக்களை அழைத்து வந்து நிரப்ப வேண்டாம்: தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை 0

🕔16.Jun 2020

“பொதுத் தேர்தலின் பொருட்டு கடந்த காலத்தை போல மக்களை கூட்டி ஊர்வலங்கள் போன்றவற்றை நடத்தி கோஷங்களை எழுப்ப வேண்டாம். கூட்டங்களுக்கு மக்களை அழைத்து வந்து நிரப்ப வேண்டாம்” என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார். வாக்குச் சாவடிகளில் கொரோனா வைரஸ் பரவாது என்பதால், அச்சமின்றி வாக்களிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர்

மேலும்...
பாகிஸ்தானில் பணியாற்றிய இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் மாயம்

பாகிஸ்தானில் பணியாற்றிய இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் மாயம் 0

🕔15.Jun 2020

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் பணியில் இருந்த இரு இந்திய தூதரக அதிகாரிகள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் அந்நாட்டு அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதனை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் ஷுமைலா ஜாஃப்ரி உறுதிபடுத்தியுள்ளார். பாகிஸ்தானின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிடியில் அவர்கள் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சில நாட்களுக்கு முன்புதான்,

மேலும்...
ஒரு சாரார் ஆதாயமடையும் விதமாக, பொதுத் தேர்தல் அமைந்து விடக் கூடாது: முன்னாள் அமைச்சர் றிசாட்

ஒரு சாரார் ஆதாயமடையும் விதமாக, பொதுத் தேர்தல் அமைந்து விடக் கூடாது: முன்னாள் அமைச்சர் றிசாட் 0

🕔15.Jun 2020

பொதுத்தேர்தல் நீதியானதாகவும் நேர்மையான முறையிலும் நடைபெறும் வகையில் அதனை உறுதிப்படுத்தி, செயற்பாடுகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வவுனியாவில், நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே முன்னாள் அமைச்சர் இதனைக் கூறினார்.  அவர் மேலும் கூறுகையில்; “கட்சி ஒன்றின் தலைவராக அதுவும் சிறுபான்மை

மேலும்...
என்னை பயங்கரவாதி என ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு கடந்த அரசாங்கம் அறிவித்திருந்தது: ஞானசார தேரர்

என்னை பயங்கரவாதி என ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு கடந்த அரசாங்கம் அறிவித்திருந்தது: ஞானசார தேரர் 0

🕔15.Jun 2020

தன்னை பயங்கரவாதி என பேஸ்புக் நிறுவனத்திற்கு கடந்த அரசாங்கம் அறிவித்திருந்ததாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனம் தனது புகைப்படம் மற்றும் பெயருக்கும் தடைவிதித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஈஸ்டர் தின குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்து விட்டு,

மேலும்...
சஹ்ரானுக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் எவ்வித தொடர்புகளும் இல்லை: ஹக்கீம்

சஹ்ரானுக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் எவ்வித தொடர்புகளும் இல்லை: ஹக்கீம் 0

🕔15.Jun 2020

ஈஸ்டர் தின தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சந்தேக நபர் சஹ்ரான் ஹாசீம் குழுவுடன் தமது அரசியல் கட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இருந்தபோதும் அந்த தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். கண்டி, பிலிமதலாவ பகுதியில் இடம்பெற்ற

மேலும்...
றிசாட் பதியுதீன் முயற்சியினால், கொரோனா இடர்காலக் கொடுப்பனவை இடம்பெயர்நதோருக்கு வழங்க நடவடிக்கை

றிசாட் பதியுதீன் முயற்சியினால், கொரோனா இடர்காலக் கொடுப்பனவை இடம்பெயர்நதோருக்கு வழங்க நடவடிக்கை 0

🕔14.Jun 2020

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில், புத்தளத்தில் வாழும் மக்களுக்கான 5000 ரூபா இடர்கால கொடுப்பனவுகள் இவ்வாரம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாக, பொருளாதார நிலைமைகள் முழுமையாக முடக்கப்பட்ட நிலையில், அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு கொரோனா கொடுப்பனவாக 5000 ரூபா முதற்கட்டமாகவும், அதனையடுத்து இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த

மேலும்...
கொரோனாவால் இறந்த முஸ்லிம் ஒருவரை புதைப்பதா, எரிப்பதா என்பதில் கூட, ஒரு நிலைப்பாட்டை எடுக்க சஜித் அணியினரால் முடியவில்லை: மங்கள குற்றச்சாட்டு

கொரோனாவால் இறந்த முஸ்லிம் ஒருவரை புதைப்பதா, எரிப்பதா என்பதில் கூட, ஒரு நிலைப்பாட்டை எடுக்க சஜித் அணியினரால் முடியவில்லை: மங்கள குற்றச்சாட்டு 0

🕔14.Jun 2020

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினால், மாற்றுக் கருத்துக்களை முன்வைக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக, லங்கா தீப வார இறுதிப் பத்திரிகைக்கு அளித்துள்ள நேர்காணலில் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரங்களின் படி ஐக்கிய மக்கள் சக்தியினாலும் கூட மாற்றுக் கருத்தினை முன்வைக்க இயலாத

மேலும்...
ஒக்ஸ்ஃபோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார் நூஹா: பெருமை கொள்கிறது அம்பாறை மாவட்டம்

ஒக்ஸ்ஃபோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார் நூஹா: பெருமை கொள்கிறது அம்பாறை மாவட்டம் 0

🕔14.Jun 2020

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நுஹா, பிரித்தானியாவின் ஒக்ஸ்ஃபோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பை நிறைவு செய்து, தனது பிரதேசத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல். அன்சார் – மருதமுனையைச் சேர்ந்த எம்.எம். ஐனுல் றமீதா ஆகியோரின் மூத்த புதல்வியான நுஹா, இவ்வாறு மருத்துவப் பட்டம் பெற்றுள்ளார். இவரின் தாய் –

மேலும்...
கொரோனா பரவினாலும், தேர்தல் நடைபெறும்: தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

கொரோனா பரவினாலும், தேர்தல் நடைபெறும்: தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் 0

🕔14.Jun 2020

கொரோனா தொற்று நாட்டில் மீண்டும் பரவினாலும் நாடாளுமன்ற தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்சிறி ரட்நாயக்க தெரிவித்துள்ளார். மீண்டும் கொரோனா பவரல் ஏற்பட்டாலும் தேர்தலை ஒத்திவைப்பதற்கு பதிலாக தொகுதிவாரியாக வாக்கெடுப்பை முன்கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த முறை தேர்தலின்போது

மேலும்...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொள்ளையிட்டவனைப் பிடித்த புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர், விபத்தில் பலி

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொள்ளையிட்டவனைப் பிடித்த புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர், விபத்தில் பலி 0

🕔14.Jun 2020

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்த அரச புலனாய்வு பிரிவில் சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 11 ஆம் திகதி தும்முல்ல

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்