மஹிந்த தேசப்பிரியவின் மேற்பார்வையில், தேர்தல் ஒத்திகை: அம்பலங்கொடயில் நடைபெறுகிறது

🕔 June 7, 2020

தேர்தல் ஒத்திகையொன்று (மாதிரி வாக்கெடுப்பு) அம்பலங்கொட விலேகொட தம்மயுக்திகரம விகாரையில் நடைபெற்று வருகிறது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரியவின் மேற்பார்கையின் கீழ், இந்த தேர்தல் ஒத்திகை இடம்பெறுகிறது.

கொரோனா தொற்றுக்கிடையில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டியுள்ளதால், உரிய சுகாதார முறையைப் பின்பற்றி எவ்வாறு தேர்தலை நடத்துவது என்பதை ஒத்திகையாக செய்து பார்ப்பதே இதன் நோக்கமாகும்.

தேவையான சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி வாக்குப்பதிவை நடத்தும்போது, வெளிப்படும் மற்றும் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினைகளை அடையாளம் காண இந்த தேர்தல் ஒத்திகை உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

Comments