நாட்டின் வான் பரப்பில் மர்ம உயிரினம்: கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவிப்பு

🕔 June 7, 2020

நாட்டின் வான்பரப்பில் மர்மான உயிரினம் ஒன்று சுற்றித் திரிவதாக கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தெளிவாக அடையாளம் காணப்படாத உயிரினம் ஒன்றே இவ்வாறு சுற்றித் திரிவதாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

“இது குறித்த காணொளி ஒன்றும் கிடைத்துள்ளது. எவ்வாறாயினும் இது எந்த வகை உயிரினம் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை” என அவர் கூறியுள்ளார்.

ஹம்பாந்தொட்ட, திருகோணமலை, நுவரெலியா உட்பட பல பிரதேசங்களில் குறித்த உயிரினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்