சிறப்பு ஒத்திகைத் தேர்தல்: நாளை அம்பலாங்கொடயில்

🕔 June 6, 2020

சிறப்பு ஒத்திகைத் தேர்தலொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல்கள் ஆணைக்குழு – அம்பலாங்கொடயில் இந்தத் தேர்தலை நடத்தவுள்ளது.

கொரோனா நோய்த் தொற்றுக்கு இடையே, தனிநபர் இடைவெளிகளைப் பேணியபடி, சுகாதார விதிமுறைகளின் படி தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பதைப் புரிந்துகொள்ளும் பொருட்டு நாளைய தினம் இந்த சிறப்பு ஒத்திகை தேர்தல் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த ஒத்திகை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments