ஹெரோயினுடன் பேருவளையில் மூவர் கைது

ஹெரோயினுடன் பேருவளையில் மூவர் கைது 0

🕔6.Jan 2019

ஹெரோயின் போதைப் பொருளுடன் மூன்று மீனவர்கள் நேற்று மாலை பேருவளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 73.6 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சந்தேக நபர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை களுத்துறை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
தமிழர்களைப் பழிவாங்கும் வகையில் சுதந்திரக் கட்சி நடந்து கொள்ளக் கூடாது: சுமந்திரன் கோரிக்கை

தமிழர்களைப் பழிவாங்கும் வகையில் சுதந்திரக் கட்சி நடந்து கொள்ளக் கூடாது: சுமந்திரன் கோரிக்கை 0

🕔6.Jan 2019

நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்தமைக்காகத் தமிழர்களை ஒருபோதும் பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ளக் கூடாது என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் முற்போக்கானவர்களான தயாசிறி ஜயசேகரவும் டிலான் பெரேராவும் தலைமை தாங்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை

மேலும்...
முன்னாள் மாகாண கல்வி அமைச்சர் காலமானார்

முன்னாள் மாகாண கல்வி அமைச்சர் காலமானார் 0

🕔6.Jan 2019

– க.கிஷாந்தன் – மத்திய மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான சந்தனம் அருள்சாமி இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். தொழிற்சங்கவாதியும், அரசியலில் நீண்ட நாள் அனுபவம் கொண்ட அவர் தனது 59ஆவது வயதில் மரணமடைந்தார். டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சந்தனம் அருள்சாமி இன்று அதிகாலை மரணமடைந்தமையை அவரின்

மேலும்...
கிழக்கு ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்படுவதற்கு, தமிழ் தலைமைகளின் முடிவுளே காரணம்: வியாழேந்திரன்

கிழக்கு ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்படுவதற்கு, தமிழ் தலைமைகளின் முடிவுளே காரணம்: வியாழேந்திரன் 0

🕔5.Jan 2019

 தமிழ் தலைமைகள் தொடர்ச்சியாக எடுத்த முடிவுகளே, கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்துக்கு காரணம் என்று, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநராக, ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கிழக்கு அபிவிருத்தி அமைச்சை தான் எடுத்தபோது துள்ளி குதித்து துரோகிப் பட்டம் சூட்டும் அளவுக்குச்

மேலும்...
ஹிஸ்புல்லாஹ்வின் நியமனமும், கிழக்குத் தமிழரசியலும்: அலசுகிறார் பஷீர் சேகு தாவூத்

ஹிஸ்புல்லாஹ்வின் நியமனமும், கிழக்குத் தமிழரசியலும்: அலசுகிறார் பஷீர் சேகு தாவூத் 0

🕔5.Jan 2019

– பஷீர் சேகு தாவூத் (ஐக்கிய சமாதானக் கூட்மைப்பின் தவிசாளர், முன்னாள் அமைச்சர்) –நண்பரே ஹிஸ்புழ்ழாஹ்,இதுவும் கடந்து போகும் என நம்புவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை. நண்பா, கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை நீங்கள் விரும்பி ஏற்றிருப்பீர்கள் என்று நான் நம்பவில்லை. இன்னும் நீங்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை. கடந்த காலங்களில் அரசியலில்

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் ‘சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருப்போம்’ வேலைத்திட்டம்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் ‘சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருப்போம்’ வேலைத்திட்டம் 0

🕔5.Jan 2019

– றிசாத் ஏ காதர் –அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நிறுவன சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ், ‘சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருப்போம்’ எனும் தொனிப்பொருளில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும், கடற்கரைச் சூழலை சுத்தப்படுத்தும் செயற்பாடும் நேற்றும் இன்று சனிக்கிழமையும் இடம்பெற்றது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர்,  பொது சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர்

மேலும்...
கொலைத் திட்டம் தொடர்பில் ஊடகங்களிடம் பேசக் கூடாது: நாமலுக்கு நீதிமன்றம் தடை

கொலைத் திட்டம் தொடர்பில் ஊடகங்களிடம் பேசக் கூடாது: நாமலுக்கு நீதிமன்றம் தடை 0

🕔5.Jan 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரமுகர்களைக் கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் சதி தொடர்பில், ஊடகங்களுக்கு நாமல் குமார கருத்துக்களை வெளியிடக் கூடாது என, கொழும்பு – கோட்டே நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிவான் ரங்க திசாநாயக்கவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, இந்த

மேலும்...
ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க முடியும்: ரவி நம்பிக்கை

ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க முடியும்: ரவி நம்பிக்கை 0

🕔5.Jan 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க முடியும் என்கிற நம்பிக்கை காணப்படுகின்ற போதிலும், அதனை குழப்பும் வகையில் பல்வேறு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக, அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே, அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், சுதந்திர கட்சியை அழித்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போது ஐக்கிய தேசிய கட்சியையும்

மேலும்...
கிழக்கு மாகாணமும், வெற்றும் வெறிதுமாக வேண்டிய சிந்தனைகளும்

கிழக்கு மாகாணமும், வெற்றும் வெறிதுமாக வேண்டிய சிந்தனைகளும் 0

🕔4.Jan 2019

– அபூ அத்னான் – “கிழக்கு மக்கள் எங்களிடம்தான் மண்டியிட வேண்டும், கிழக்கை ஆள்வதற்கு தகுதியானவர்கள் கிழக்கில் இல்லை” என்ற கருத்துப்பட, ஒரு பேஸ்புக் சம்பாஷணையை கொழும்பைச் சேர்ந்த சபீக் ரஜாப்தீன், அதுவும் முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் பதவியை வகித்துக் கொண்டு நிகழ்த்தி, மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியமையை யாரும் மறந்திருக்க முடியாது. உண்மையில், குறித்த

மேலும்...
மூத்த சகோதரன் தாக்கியதில் தம்பி பலி; பொத்துவில் அறுகம்பையில் பரிதாபம்

மூத்த சகோதரன் தாக்கியதில் தம்பி பலி; பொத்துவில் அறுகம்பையில் பரிதாபம் 0

🕔4.Jan 2019

– கலீபா – பொத்துவில் அறுகம்பைப் பிரதேசத்தில் சகோதரர்களிடையே ஏற்பட்ட சண்டையில், ஒருவர் மரணமடைந்தார். வாய்த்தர்க்கத்தில் ஆரம்பித்த பிரச்சினை, பின்னர் சண்டையாக மாறிய போது, இளைய சகோதனை மூத்த சகோதரன் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளார். இதன்போதே, இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.சம்பவம்பற்றி மேலும் தெரிய வருவதாவது; பொத்துவில்

மேலும்...
இலங்கையின் முஸ்லிம் ஆளுநர்கள்: இரட்டைச் சந்தோசமும், வழமையை விடக் கூடிய பாரமும்

இலங்கையின் முஸ்லிம் ஆளுநர்கள்: இரட்டைச் சந்தோசமும், வழமையை விடக் கூடிய பாரமும் 0

🕔4.Jan 2019

– மப்றூக் – கிழக்கு மாகாணத்துக்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து ஹிஸ்புல்லா – ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம்களுக்கு சந்தோசமான செய்தியாகும். கூடவே, மேல் மாகாணத்துக்கான ஆளுநராக ஆஸாத் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம்களுக்கு இரட்டைச் சந்தோசத்தை நிச்சயம் கொடுத்திருக்கும். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இன்னொரு வகையில் சொன்னால், சிறுபான்மை மக்கள் – பெரும்பான்மையாக வாழும் மாகாணமிது.

மேலும்...
ஹிஸ்புல்லாவின் தேசியப்பட்டியல் எம்.பி. பதவி யாருக்கு: அம்பாறைக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா?

ஹிஸ்புல்லாவின் தேசியப்பட்டியல் எம்.பி. பதவி யாருக்கு: அம்பாறைக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா? 0

🕔4.Jan 2019

– அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர்  பதவியை பொறுப்பேற்கும் பொருட்டு, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ராஜிநாமா செய்தமையினை அடுத்து, அந்தப் பதவி யாருக்கு வழங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு அரசியலரங்கில் எழுந்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஹிஸ்புல்லா ராஜிநாமா

மேலும்...
கிழக்குக்கு ஹிஸ்புல்லா, மேற்குக்கு ஆசாத் சாலி: ஆளுநர்களாக நியமனம்

கிழக்குக்கு ஹிஸ்புல்லா, மேற்குக்கு ஆசாத் சாலி: ஆளுநர்களாக நியமனம் 0

🕔4.Jan 2019

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை, மேல் மாகாண ஆளுநராக ஆஸாத் சாலி நியமிக்கப்பட்டுள்ளார். சதேந்ர மைத்ரி குணரத்ன மத்திய மாகாணத்துக்கும், பேசல ஜனரத்ன பண்டார வடமேல் மாகாணத்துக்கும் சரத் எக்கநாயக்க வடமத்திய மாகாணத்துக்கும் ஆளநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லாஹ், ஐக்கிய

மேலும்...
நான் ராஜிநாமா செய்தமையினால்தான், தயாசிறி நியமிக்கப்பட்டார்: பேராசிரியர் பியதாச

நான் ராஜிநாமா செய்தமையினால்தான், தயாசிறி நியமிக்கப்பட்டார்: பேராசிரியர் பியதாச 0

🕔4.Jan 2019

சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தான் விலகுவதாக அறிவித்தமையினை அடுத்தே, அந்தப் பதவிக்கு நாடளுமன்ற உறுப்பினர்  தயாசிறி ஜயசேகரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார் என்று, அந்தக் கட்சியின் முன்னாள் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். இது தவிர இந்த நியமனத்தில் வேறு எந்த மறைமுக விடயங்களும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
வட மாகாண ஆளுராக மார்ஷல் பெரேரா; ரெஜினோல்ட் குரேக்கு பதவி இல்லை

வட மாகாண ஆளுராக மார்ஷல் பெரேரா; ரெஜினோல்ட் குரேக்கு பதவி இல்லை 0

🕔4.Jan 2019

தென் மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய மார்ஷல் பெரேரா, வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக சப்ரகமுவ மாகாண ஆளுராகவும் மார்ஷல் பெரேரா பதவி வகித்துள்ளார். இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய ரெஜினோல்ட் குரேயை ஆளுநராக ஜனாதிபதி நியமிக்க மாட்டார் என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அனைத்து மாகாண ஆளுநர்களையும் பதவி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்