கொலைத் திட்டம் தொடர்பில் ஊடகங்களிடம் பேசக் கூடாது: நாமலுக்கு நீதிமன்றம் தடை

🕔 January 5, 2019

னாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரமுகர்களைக் கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் சதி தொடர்பில், ஊடகங்களுக்கு நாமல் குமார கருத்துக்களை வெளியிடக் கூடாது என, கொழும்பு – கோட்டே நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நீதிவான் ரங்க திசாநாயக்கவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, இந்த தடையை அவர் விதித்தார்.

குறித்த சதித் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு நாமல் குமார கருத்துத் தெரிவிப்பது, தமது விசாரணைகளுக்குத் தடையாக உள்ளது என, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

மேலும், மேற்படி சதித் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு நாமல் குமார வெளியிட்ட விபரங்கள் அனைத்தினையும் கையளிக்குமாறும், ஊடக நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்