நான் ராஜிநாமா செய்தமையினால்தான், தயாசிறி நியமிக்கப்பட்டார்: பேராசிரியர் பியதாச

🕔 January 4, 2019

சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தான் விலகுவதாக அறிவித்தமையினை அடுத்தே, அந்தப் பதவிக்கு நாடளுமன்ற உறுப்பினர்  தயாசிறி ஜயசேகரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார் என்று, அந்தக் கட்சியின் முன்னாள் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

இது தவிர இந்த நியமனத்தில் வேறு எந்த மறைமுக விடயங்களும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக நேற்று வியாழக்கிழமை தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் லக்ஷ்மன் பியதாசவிடம் கேட்கப்பட்டபோதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்