வட மாகாண ஆளுராக மார்ஷல் பெரேரா; ரெஜினோல்ட் குரேக்கு பதவி இல்லை
தென் மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய மார்ஷல் பெரேரா, வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக சப்ரகமுவ மாகாண ஆளுராகவும் மார்ஷல் பெரேரா பதவி வகித்துள்ளார்.
இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய ரெஜினோல்ட் குரேயை ஆளுநராக ஜனாதிபதி நியமிக்க மாட்டார் என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அனைத்து மாகாண ஆளுநர்களையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியமைக்கு அமைவாக, ஆளுநர்கள் தங்களது பதவி விலகல் கடிதங்களைக் கையளித்திருந்த நிலையில், மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நியமிக்கப்படவுள்ளனர்.