ஹிஸ்புல்லாஹ்வின் நியமனமும், கிழக்குத் தமிழரசியலும்: அலசுகிறார் பஷீர் சேகு தாவூத்

🕔 January 5, 2019

– பஷீர் சேகு தாவூத் (ஐக்கிய சமாதானக் கூட்மைப்பின் தவிசாளர், முன்னாள் அமைச்சர்) –

ண்பரே ஹிஸ்புழ்ழாஹ்,

இதுவும் கடந்து போகும் என நம்புவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை.

நண்பா, கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை நீங்கள் விரும்பி ஏற்றிருப்பீர்கள் என்று நான் நம்பவில்லை. இன்னும் நீங்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை. கடந்த காலங்களில் அரசியலில் இருந்தும், உயர் நிர்வாகப் பதவிகளில் இருந்தும் ஓய்வு பெற்றவர்களையே மாகாணங்களின் ஆளுநர்களாக ஜனாதிபதிகள் நியமித்திருந்தனர். ஆனால் நீங்கள் இந்த வகையறாக்குள் அடங்கவில்லை; ஆயினும் ஆளுநராகிவிட்டீர்கள்.

இதுலிருந்து ஜனாதிபதி தனது அரசியல் உபாயத்துக்காக தங்களைப் பாவிக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். உங்களை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமித்ததன் மூலமும் – மைத்திரி தனது உபாயத்தை திறைவேற்ற முனைந்து தோற்றுப் போனார் என்பதை இவ்விடத்தில் நினைவூட்டுவது பொருத்தமாகும்.

ஜனாதிபதியின் உங்கள் மீதான மேலுள்ள நம்பிக்கை அவரது உபாயங்களின் விளையாட்டன்றி வேறில்லை.

ஜனாதிபதி, ஹிஸ்புழ்ழாஹ்வை அவரது நலனுக்காக தற்போது தற்காலிகமாக பாவித்துவிட்டு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் பின் அவரை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் ஆக்குவதற்கு உடன்பட்டிருக்க வேண்டும். இல்லாது போனால் இன்னும் தேர்தல் அரசியலில் வாய்ப்புள்ள ஹிஸ்புழ்ழாஹ் மைத்திரியின் ஆளுநர் ஆட்டத்திற்கு ஒத்துப் போயிருக்க மாட்டார்.

தற்போதைய ஆளுநர் நியமனத்தில்; கல்முனை மேயர் நியமன மன நிலையில் கிழக்குத் தமிழர்கள் உழலத் தேவையில்லை. அதாவது “எதிர்த்துவிட்டு ஆதரவளிப்பது அல்லது ஆதரவளித்துவிட்டு எதிர்ப்பது” என்ற கேவலமான வலதுசாரித் தமிழ்த்தேசிய அரசியலை மேயத் தேவையில்லை.

கிழக்குத் தமிழர்களை நன்றாகக் கவனித்தும் – கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் அதிகாரத்தைக் கையில் எடுத்தும் இவ்விரு சிறுபான்மை மக்களின் ஆதரவைத் தனக்கு எடுத்துத் தருமாறு கூறியே ஹிஸ்புழ்ழாஹ்வை ஆளுநராக மைத்திரி நியமித்திருப்பார். ஏனெனில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் பொது வேட்பாளராக வரமுடியும் என்று நம்பியிருக்கிறார்.

எனவே,கிழக்குத் தமிழரசியல் ஹிஸ்புழ்ழாஹ்வின் புதிய நியமனத்தினால் குலுங்கத் தேவையில்லை என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயமாகும்.

நண்பர் ஹிஸ்புழ்ழாஹ் அபிவிருத்தி அரசியலில் இன்றிருக்கும் வடக்கு கிழக்கு மற்றும் மலையக சிறுபான்மை வலதுசாரி அரசியல்வாதிகள் எல்லோரை விடவும் வல்லவராவார். ஆனால் அவர் ஓர் உரிமைப் போராளியல்ல – நமது தமிழ் பேசும் ஏனைய தலைவர்கள் போலவே.

இந்த ஆளுநர் நியமனங்கள்; கட்சி அரசியலையும் குறித்த கட்சியில் தலைவரின் அதிகாரத்தையும் காப்பாற்றும் வகையிலமைந்தது என்பதன்றி வேறில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்