அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் ‘சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருப்போம்’ வேலைத்திட்டம்
– றிசாத் ஏ காதர் –
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நிறுவன சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ், ‘சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருப்போம்’ எனும் தொனிப்பொருளில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வும், கடற்கரைச் சூழலை சுத்தப்படுத்தும் செயற்பாடும் நேற்றும் இன்று சனிக்கிழமையும் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர், பொது சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் பீ.கே. ரவீந்திரன், தரமுகாமைத்துவ அலகு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஜே. நௌபல் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.
மேற்படி நிகழ்வுக்கு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை ஊழியர்கள், அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் சன் ரைஸ் விளையாட்டுக்கழகம், ஏஸ் விளையாட்டக்கழகம், வை.எம்.எம்.ஏ அமைப்பு ஆகியவற்றுடன் முல்லைத்தீவு ஜூம்ஆ பள்ளிவாசல் நிருவாகத்தினர், அக்ரைப்பற்று எப்.பீ.சி நிறுவனம் உட்பட அக்கரைப்பற்று மூன்றாம் பிரிவுக்கான கிராம அபிவிருத்தி அமைப்பினர் தங்களது பூரண ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையினால் நடைமுறைப்படுத்தப்படுத்தப்படும் 2019ம் ஆண்டுக்கான நிறுவன சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் முதலாவது செயற்றிட்டம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.