கிழக்குக்கு ஹிஸ்புல்லா, மேற்குக்கு ஆசாத் சாலி: ஆளுநர்களாக நியமனம்
🕔 January 4, 2019
கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை, மேல் மாகாண ஆளுநராக ஆஸாத் சாலி நியமிக்கப்பட்டுள்ளார்.
சதேந்ர மைத்ரி குணரத்ன மத்திய மாகாணத்துக்கும், பேசல ஜனரத்ன பண்டார வடமேல் மாகாணத்துக்கும் சரத் எக்கநாயக்க வடமத்திய மாகாணத்துக்கும் ஆளநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லாஹ், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்திருந்தார்.
எனவே, ஹிஸ்புல்லாவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி யாருக்கு வழங்கப்படும் எனும் கேள்வி அரசியலரங்களில் சூடு பிடித்துள்ளது.