ஹிஸ்புல்லாவின் தேசியப்பட்டியல் எம்.பி. பதவி யாருக்கு: அம்பாறைக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா?

🕔 January 4, 2019

– அஹமட் –

கிழக்கு மாகாண ஆளுநர்  பதவியை பொறுப்பேற்கும் பொருட்டு, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ராஜிநாமா செய்தமையினை அடுத்து, அந்தப் பதவி யாருக்கு வழங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு அரசியலரங்கில் எழுந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஹிஸ்புல்லா ராஜிநாமா செய்த – தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் நியமிக்கப்படுவாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்த நிலையில், ஹிஸ்புல்லாவின் நாடளுமன்ற பதவி வெற்றிடத்துக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்